Ameer - விருமாண்டி படத்துக்காக 1 லட்சம் ரூபாய் செலவு செய்த பருத்திவீரன் அமீர்.. செம சம்பவம் உள்ளே

சென்னை: Ameer Birthday (அமீர் பிறந்தநாள்) தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநரும், நடிகருமான அமீரின் 56ஆவது பிறந்தநாள் இன்று.

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அமீர். சேது, நந்தா ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே பணியாற்றிய அவர் பாலாவுக்கு நண்பரும்கூட. அதாவது அமீரின் அண்ணனும், பாலாவும் வகுப்பு தோழர்கள். இரண்டு படங்களில் பாலாவிடம் பணியாற்றிவிட்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அமீர்.

Ameers 56th Birthday Today here is unknown details about him

முதல் படமே கவனம்: காதல் ஜானரில் முதல் படத்தை இயக்கினாலும் அதை வித்தியாசமான முறையில் செய்திருந்தார் அமீர். சூர்யாவையும் அதுவரை பார்க்காத கோணத்தில் காண்பித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனால் சூர்யாவுக்கும் அவருக்குமான நட்பு மேற்கொண்டு இறுக்கமானது. தொடர்ந்து அடுத்த படமாக ஜீவாவை வைத்து ராம் படத்தை இயக்கினார்.

இயக்குநர் மட்டுமில்லை: ராம் படத்தை அமீர் இயக்க மட்டுமில்லாமல் தயாரிக்கவும் செய்தார். இரண்டாவது படத்திலேயே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அமீரை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் பட்டது. அமீரும் பல கஷ்டங்களை சந்தித்து ராம் படத்தை தயாரித்து ரிலீஸும் செய்துவிட்டார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை அள்ளியது.

பருத்திவீரன் அமீர்: அவரது கரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக இருப்பது பருத்திவீரன் படம். கார்த்தியை அந்தப் படத்தின் மூலம் அறிமுகமாக்கி மெகா ஹிட் படமாக கொடுத்தார் பருத்திவீரனை. அந்தப் படத்தில் நடித்ததற்காக ப்ரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. இன்றுவரை பல படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது அமீரின் பருத்திவீரன்.

பிரச்னை: பருத்திவீரன் படத்தால் அமீருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் சிலரால் மரியாதை கிடைக்கவில்லை. தன்னுடைய சொந்த காசை போட்டுத்தான் அந்தப் படத்தையும் முடித்தார் அமீர். ஆனால் அதுதொடர்பான பிரச்னை 17 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. அது தந்த மன உளைச்சலோ என்னவோ படங்கள் இயக்குவதையும் குறைத்துக்கொண்டார். கடைசியாக ஆதிபகவான் படத்தை இயக்கினார். அதுவும் சரியாக போகவில்லை. தற்போது நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அமீர் என்னும் மிகச்சிறந்த படைப்பாளி மீண்டும் படங்கள் இயக்க வேண்டும். பருத்திவீரன் பிரச்னையில் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதுதான் பலரின் விருப்பம்.

விருமாண்டிக்காக ஒரு லட்சம் ரூபாய்: அவர் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சூழலில் ராம் படத்தின்போது அவர் செய்த ஒரு செயலை பார்க்கலாம். அதாவது படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்திருக்கிறது. அப்போது ஒரு நாள் தனது மேனேஜரை அழைத்த அவர் மதுரைவரைக்கும் போயிட்டு வந்துடுறேன் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

இயக்குநரும் இப்போ வந்துவிடுவார் அப்போ வந்துவிடுவார் என்று நினைத்து படத்தில் பணியாற்றியவர்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள. முக்கியமாக மேனேஜரோ, இயக்குநர் பணம் வாங்க சென்றிருக்கிறார் என்று நினைத்திருக்கிறார். மாலை வேளை நெருங்குகையில் ஃபோன் செய்த அமீர், எல்லோரையும் ரூமுக்கு போக சொல்லு ஷூட்டிங்கை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு கொடைக்கானல் வந்திருக்கிறார்.

ஸ்பாட்டுக்கு வந்த அமீரிடம் மேனேஜர் பணம் வாங்கிட்டிங்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அமீரோ, யோவ் நான் பணம் வாங்கப்போறேன்னு உனக்கு யார் சொன்னா. விருமாண்டி படம் ரிலீஸாகியிருக்கு ய்யா அதை போய் பார்த்துட்டு வந்தேன் என்றிருக்கிறார். இதனால் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்துவிட்டாராம் மேனேஜர்.

ஏனெனில் ஒரு நாள் ஷூட்டிங் கேன்சல் ஆனால் கிட்டத்தட்ட 1,50, 000 செலவு ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக விருமாண்டி படத்தை ஒன்னரை லட்சம் ரூபாய் செல்வது செய்து அமீர் பார்த்திருக்கிறார். அந்த அளவு கமல் ஹாசனுக்கு வெறித்தனமான ரசிகர் அவர். பிறந்தநாள் வாழ்த்துகள் அமீர்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X