twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "தி காட்பாதர்" படத்தில் நடித்த பிரபல நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார் !

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் : மாஃபியா திரைப்படமான "தி காட்பாதர்" படத்தில் கேங்ஸ்டர் சோனி கார்லியோனாக நடித்த அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார். அவருக்கு வயது 82.

    American actor James caan has died

    ஜேம்ஸ் எட்மண்ட் கான், மார்ச் 26, 1940 இல் நியூயார்க் நகரத்தில் பிராங்க்ஸ் பரோவில் ஜெர்மன் யூத குடும்பத்தில் பிறந்தார். திரைப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஈடுபாடுக் கொண்ட இவர்1971 ஆம் ஆண்டு தொலைக்காட்சித் திரைப்படமான "பிரையன்ஸ் சாங்" படத்தில், கால்பந்து வீரர் பிரையன் பிக்கோலோவாக நடித்திருந்தார். இந்த கேரக்டரில் நடித்ததற்காக அனைவர் இடத்திலும் பாராட்டுக்களை பெற்றார்.

    என்ன ஜெயம் ரவி முயல்வேட்டைக்கு போறாரா? டீசரை பார்த்த பிறகாவது கூஸ்பம்ப்ஸ் வருமா? ரசிகர்கள் கேள்வி? என்ன ஜெயம் ரவி முயல்வேட்டைக்கு போறாரா? டீசரை பார்த்த பிறகாவது கூஸ்பம்ப்ஸ் வருமா? ரசிகர்கள் கேள்வி?

    இதையடுத்து, மாஃபியாக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி மேரியோ புஸோ எழுதிய தி காட்ஃபாதர் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தி காட்ஃபாதர் திரைப்படத்தில் சோனிக் கோர்லியோன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1972ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. சினிமா விரும்பிகளால் இன்று வரை கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இப்படம் உள்ளது.

    தி காட்ஃபாதர் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, கோல்டன் குளோபல் விருது, எம்மி விருது என அந்த படத்திற்காக மட்டும் பல விருதுகளை பெற்றார். ஜேம்ஸ் கானின் திரைப்பயணம் ஆறு தசாப்தங்களாக நீடித்துள்ளது. உளவியல் த்ரில்லர் படமான "மிசரி" முதல் நகைச்சுவை படதான "எல்ஃப்" வரை திரைப்படங்களில் மிகவும் ரசிக்கும் படி நடித்திருப்பார் ஜேம்ஸ். கடந்த ஆண்டு, அவர் எலன் பர்ஸ்டினுக்கு ஜோடியாக "குயின் பீஸ்" என்ற காதல் நகைச்சுவை படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில், ஜேம்ஸ் கானின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நடிகர் ஜேம்ஸ் கான் நேற்று மாலை இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஜேம்ஸ் கான் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற தி ரெயின் பீப்பிள் மேலும் ஜேம்ஸ் கான் இயக்கிய பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா போன்ற படங்களை என்றுமே மறக்க முடியாதவை என்று ட்விட்டரில் ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

    English summary
    Godfather actor james can has died age 82
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X