twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுகள் 2020: ஒபாமாவும் அவரது வொய்ஃபியும் ரொம்ப ஹேப்பி.. ஏன்னு பாருங்க!

    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    நியூயார்க்: அமெரிக்கன் ஃபேக்டரி ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் ஒபாமாவும் அவரது மனைவியும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தென்கொரிய படமான பாராசைட் நான்கு விருதுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

    சிறந்த குறும்படத்திற்கான விருதை தி நெய்பர்ஸ் விண்டோ படம் தட்டிச்சென்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது அமெரிக்கன் ஃபேக்டரி என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.

    அமெரிக்கன் ஃபேக்டரி

    அமெரிக்கன் ஃபேக்டரி

    அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் இணைந்து இந்த ‘அமெரிக்கன் ஃபேக்டரி' என்ற ஆவணப் படத்தை கடந்த ஆண்டு
    தயாரித்தனர். இந்தப் படத்தை கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் இணைய தளத்தில் அவர்கள் வெளியிட்டனர்.

    இயக்குநர் ஜூலியா

    இயக்குநர் ஜூலியா

    அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகணப்பகுதியில் சீன கோடீஸ்வரரால் திறக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையின் கதையாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆவணப்பட இயக்குநர் ஜூலியா ரெய்சர்ட் இரண்டு துணை இயக்குநர்களான ரெய்சர்ட் மற்றும் ஸ்டீவென் போக்னர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியிருந்தார்.

    ஆஸ்கர் விருது

    ஆஸ்கர் விருது

    இந்நிலையில் இந்தப் படத்திற்கு சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமா, படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாரக் ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

    ஒபாமா டிவிட்

    அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அமெரிக்க தொழிற்சாலையின் பின்னால் உள்ள திரைப்படத் இயக்குநர்களான ஜூலியா மற்றும் ஸ்டீவன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள், பொருளாதார மாற்றத்தைத் துடைப்பதன் மனித விளைவுகளைப் பற்றி இதுபோன்ற சிக்கலான, நகரும் கதையைச் சொன்னதற்காக. திறமையான மற்றும் நேர்மையான இரண்டு நல்ல மனிதர்கள் முதல் வெளியீட்டிற்கான ஆஸ்கார் விருதை வீட்டிற்கு எடுத்துச் செல்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Oscar awards 2020: American factory documentary movie got Oscar award for best documentary movie. American factory documentary film produced by Obama and his wife.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X