சிறுமியுடன் திருமணம்.. லஞ்சம் தந்து போலி ஐடி கார்டு.. சர்ச்சைகளுக்குப் பேர் போன பிரபல பாடகர் கைது!

சிறுமி திருமண வழக்கில் பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஆர்.கெல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க்: 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வழக்கில் லஞ்சம் கொடுத்து போலியான ஐடி கார்டு வாங்கியதற்காக பிரபல பாப் பாடகர் ஆர்.கெல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் ஆர். கெல்லி. 50 வயதாகும் கெல்லி மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன.

American pop singer Kelly arrested in child marriage case

மூன்று மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் கெல்லி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ரூ.7 கோடியே 10 லட்சம் பிணைத் தொகையில் ஜாமீனில் விடப்பட்டார்.

இதற்கிடைய கடந்த 1994ம் ஆண்டு 15 வயது சிறுமியை கெல்லி திருமணம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. சிறுமியை திருமணம் செய்ய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அந்த பெண்ணின் வயதை உயர்த்தி காட்டியதாகவும் கெல்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த 2001ம் ஆண்டும் விமான விபத்தில் கெல்லி திருமணம் செய்த பெண் இறந்துவிட்டார். ஆனபோதும் இந்த வழக்கு இன்னமும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அந்த வழக்கில் கெல்லி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்தின் போது மணப்பெண்ணின் வயதைக் கூட்டிக் காட்டுவதற்காக அவர் லஞ்சம் கொடுத்து போலியான ஐடி கார்டு உருவாக்கியதற்காக தற்போது அவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். சிகாகோ சிறைச்சாலையில் கெல்லி அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X