ஒண்ணு இல்லை.. 3 பெரிய ஹீரோக்கள் திடீர் தியேட்டர் விசிட்.. உபேந்திராவுக்காக கரம் கோர்த்த யஷ் - சுதீப்
பெங்களூர்: முன்னணி நடிகர்கள் தியேட்டர் விசிட் அடித்தால் மிகப்பெரிய சர்ச்சை வெடிக்கும் என்றும் மரண சம்பவங்கள் நிகழும் என ஹைதராபாத் போலீஸார் ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் தியேட்டர் விசிட் சம்பவத்தில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தை கடுமையாக எதிர்த்து பேசி வருகின்றனர். அல்லு அர்ஜுனுக்கு எதிராக ஹைதராபாத் போலீஸார் மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி என தொடர்ந்து கடுமையான கண்டனங்களும் அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், பெங்களூருவில் நேற்று உபேந்திராவின் UI படத்தை தியேட்டருக்கு சென்று கேஜிஎஃப் ஹீரோ யஷ் மற்றும் பாகுபலி, நான் ஈ, விக்ராந்த் ரோணா உள்ளிட்ட பல படங்களில் நடித்த முன்னணி கன்னட நடிகரான கிச்சா சுதீப் உள்ளிட்டோர் சென்று பார்த்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அல்லு அர்ஜுன் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர்கள் தியேட்டர் விசிட் அடிக்கவே அஞ்சுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூர் போலீஸாரின் பாதுகாப்புடன் பக்காவாக நேற்று நடந்த தியேட்டர் விசிட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
உபேந்திரா படத்துக்கு ஆதரவு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. அவர் இயக்கி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள UI திரைப்படம் கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான நிலையில், அந்த படத்துக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புத்தி இருந்தால் தியேட்டரை விட்டே ஓடிவிடுங்கள் என கார்ட் எல்லாம் போட்டாலும் அந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி கன்னட திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

டாக்ஸிக் ஹீரோ தியேட்டர் விசிட்: கேஜிஎஃப் 1 மற்றும் 2 பாகங்கள் மூலம் கன்னட திரையுலகத்தை பான் இந்தியா அளவுக்கு விரிவடைய செய்த யஷ் அடுத்ததாக டாக்ஸிக் படத்திலும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்து வரும் ராமாயணம் படத்தில் ராவணனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், உபேந்திராவின் பெரிய பட்ஜெட் படத்துக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என நேற்று திடீரென தியேட்டர் விசிட் நடத்தியுள்ளார்.

கிச்சா சுதீப்: கன்னட திரையுலகின் டாப் ஹீரோவான கிச்சா சுதீப்பும் உபேந்திராவுக்காக UI படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்துள்ளார். கிச்சா சுதீப் மற்றும் யஷ் இருவரும் கட்டியணைத்து போஸ் கொடுத்துக் கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. உபேந்திரா மற்றும் உபேந்திராவின் மனைவி உள்ளிட்டோர் யஷ் மற்றும் கிச்சா சுதீப் இருவரும் இணைந்து வந்து தங்கள் படத்துக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர். டாக்ஸிக் திரைப்படம் சீக்கிரமே ரசிகர்களுக்காக வர காத்திருக்கிறது என்றும் உபேந்திராவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்றும் யஷ் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன் விவகாரம்: முன்னறிவிப்புடன் நடிகர்கள் தியேட்டருக்கு வரும்போது உரிய பாதுகாப்பு அளிப்பது போலீஸாரின் கடமை தான் என்று அல்லு அர்ஜுன் விவகாரத்தை கம்பேர் செய்து நெட்டிசன்கள் தெலங்கானா அரசு மற்றும் காவல் துறையின் தோல்வியை மூடி மறைக்க அல்லு அர்ஜுனை பலியாடாக மாற்றுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். ஆனால், இது செலிபிரிட்டி ஷோ என்றும் யஷ் அவருடைய படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று பார்த்தால் அது விபரீதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











