என் மீது பழி போடுகிறார்கள்.. அதுதான் அவர்களது டீலிங்.. சங்கீதா டைவர்ஸ் கேட்டதற்கு பின் விஜய் பேச்சு

தஞ்சாவூர்: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து கேட்டிருக்கிறார் சங்கீதா. டைவர்ஸ் கேட்டதைவிடவும்; அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணங்களும், வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களும்தான் பெரிய இடியை இறக்கியிருக்கின்றன. தவெகவினரும், விஜய் ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய் இன்று தஞ்சாவூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்பது குறித்த ஆவல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எழுந்திருந்தது

தமிழ் சினிமாவில் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு தனது ரசிகை சங்கீதாவையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் ஒருவரையொருவர் அனுசரித்து வாழ்ந்த சூழலில்; சில வருடங்களாக அவர்களுக்குள் உரசல் ஏற்பட்டிருக்கிறது. அந்த உரசல் நாளடைவில் சரியாகிவிடும் என குடும்பத்தினரும், நெருங்கியவர்களும் நினைத்தால்; அதற்கு நேர்மாறாக நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்தே சென்றிருக்கிறது. இனிமேலும் ஒத்துவராது என்று முடிவெடுத்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா. அதனையடுத்து பெரிய விவாதம் கிளம்பியது. தவெகவினர் சிலரோ சங்கீதாவையே தரக்குறைவாக பேசிவருகிறார்கள்.

Amid Divorce Controversy Vijay Breaks Silence at Thanjavur Meeting Slams Political Rivals
Photo Credit:

விஜய்யின் அமைதி: சங்கீதா மீது தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களுக்கு விஜய் இதுவரை ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. சரி கண்டனம் வேண்டாம்; குறைந்தபட்சம், 'சங்கீதாவை யாரும் அவதூறாக பேச வேண்டாம்' என ஒரு வரியை கூட ட்வீட்டாக போட முடியாததை நினைத்து பலரும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் கள நிலவரம். இப்படி விஜய் அமைதியாக இருக்கக்கூடாது என மாதர் சங்கம் வரை சொல்லி பார்த்துவிட்டது. இருந்தாலும் அது எதற்கும் அசையவில்லை அவர்.

தஞ்சை பயணம்: நிலைமை இப்படி இருக்க இன்று தஞ்சாவூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது பேசிய அவர், "நான் கடந்த கூட்டத்தில் பேசியதை வைத்து பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக சொன்னார்கள். நான் என்ன பேசினாலும் திரித்து சொல்கிறார்கள். தில்லு முல்லு வேலையெல்லாம் செய்கிறார்கள். சென்னையில் டெல்லி டெல்லி என கூவுகிறார்கள். ரெய்டு வந்துவிட்டால் டெல்லிக்கு வெள்ளை கொடி பிடிப்பதும் யார் என்று தெரியும். தமிழ்நாட்டை பிழைக்க வைப்பதே ஸ்டாலின்தான் என சொல்கிறார்கள். இதெல்லாம் ஒர்க் அவுட்டே ஆகாது பாஸ்.

திமுக தீய சக்தி: ஓம் சக்தி பராசக்தி திமுக தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்கிறார்கள். கிரிக்கெட்டில்கூட தமிழ் அணியை டெல்லி அணியால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. தமிழ்நாடுதான் தவெக. தவெகதான் தமிழ்நாடு. எனக்கும் என் மக்களுக்கும் நடுவே வேறு யாராலும் உள்ளே நுழைய முடியாது. இது இயற்கையாகவே அமைந்த உறவு. தமிழ்நாடு மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு விஜய் என்பது வரும் தேர்தலில் நிரூபிக்கப்படும்.

மாத்தி மாத்தி ஆட்சிக்கு வரலாம் என நினைத்தோம். அது நடக்கவில்லை. நீ SOP போட்டு தடுத்துடு, நான் அவன் மீது பழி போட்டு தடுத்துடுறேன் என டீலிங் போட்டிருக்கிறார்கள் அவர்களுக்குள்ளேயே டீலிங் போட்டுக்கொள்கிறார்கள். கரூரில் ஆரம்பித்து, ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் பழி போட்டார்கள். ஜனநாயகன் விஷயத்தில் முதலமைச்சர்கூட பூசி மெழுகி குரல் கொடுத்தார்கள். இருந்தாலும் எனது நன்றி" என்றார். முன்னதாக சங்கீதா பற்றி விஜய் மறைமுகமாக பேசுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர் எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X