நல்ல விமர்சனம் வந்தும் வசூலாகாத காலா.. வரவேற்பு குறைந்ததற்கு இதுதான் காரணமா?

காலா படம் நேற்று மாலை வரை உலகம் முழுக்க ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் பெரிய அளவில் இருந்தாலும், ரஜினியின் மற்ற படங்களின் வசூலை விட மிகவும் குறைவுதான்.

By Shyamsundar

Recommended Video

செம அடி வாங்கிய காலா வசூல்...விஷால் விளக்கம்!- வீடியோ

சென்னை: காலா படம் நேற்று மாலை வரை உலகம் முழுக்க ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் பெரிய அளவில் இருந்தாலும், ரஜினியின் மற்ற படங்களின் வசூலை விட மிகவும் குறைவுதான்.

படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தாலும். படம் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்போது வார இறுதியில் கூட படத்திற்கு பலர் புக் செய்யாமல் இருக்கிறார்கள்.

காலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகி உள்ளது.

முதல் காரணம் என்ன

முதல் காரணம் என்ன

படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தாலும், படம் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்போது வார இறுதியில் கூட படத்திற்கு பலர் புக் செய்யாமல் இருக்கிறார்கள்.

இரண்டாவது காரணம் என்ன

இரண்டாவது காரணம் என்ன

கபாலி படத்திற்கு வானத்தில் செல்லும் ஏரோப்பிளேன் தொடங்கி, தரையில் தெருத்தெருவாக போஸ்டர் வரை அடித்து புரொமோஷன் செய்தனர். ஆனால் தாணு அளவிற்கு தனுஷ் காலா படத்திற்கு புரொமோஷன் செய்யவில்லை. படம் வெளியாகும் கடைசி வாரத்தில் மட்டும்தான் தனுஷ் அதிக அளவில் புரொமோஷன் செய்தார். இது படத்தை பெரிய அளவில் பாதித்தது.

மூன்றாவது காரணம் என்ன

மூன்றாவது காரணம் என்ன

காவிரி பிரச்சனை காரணமாக ரஜினியின் படம் அதிகம் ஓடும் கர்நாடகாவில் காலா வெளியாகாமல் தாமதமானது. அதேபோல் இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் சில நாடுகளில் காலா முதல் நாள் வெளியாகாமல் போனது. இதனால் காலா படத்தின் பிறமாநில, வெளிநாடு வியாபாரம் பாதித்தது.

நான்காவது காரணம் என்ன

நான்காவது காரணம் என்ன

அடுத்தபடியாக இந்த படத்திற்கு வலதுசாரி கொள்கை கொண்டவர்கள் அதிக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் படத்திற்கு சரியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ராவண காவியம் என்பதால், ராம பக்தர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. ஜாதி கொள்கைக்கு எதிராக பேசியதால், தமிழக சாதி அமைப்புகள் படத்தை புறக்கணித்தது. படத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X