பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு கொடுத்தா.. பாவனி பர்த்டே பார்ட்டி.. பீச்சில் அமீருடன் செம குத்தாட்டம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட பாவனிக்கும் அதே சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்ற அமீருக்கும் இடையே பிக் பாஸ் வீட்டுக்குள்ளே காதல் மலர்ந்தது. அக்கா, தம்பி போல பழகுவது போல ஆரம்பித்து அதன் பின்னர் காதலர்களாக மாறினர். இவர்களது காதலுக்கு பிரியங்கா ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
அமீர் வருவதற்கு முன்பு வரை பாவனியிடம் நட்பாக பழகி அவரை சுற்றி சுற்றி வந்தார் அபிநய். ஆனால், அமீர் என்ட்ரிக்கு பிறகு பாவனிக்கும் அமீருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

ஓவியா, லாஸ்லியா, ஷிவானி என பிக் பாஸ் வீட்டில் நடந்த காதல் அலப்பறைகளை பார்த்து கடுப்பான ரசிகர்கள் இவங்களும் லவ் டிராமா போடுறாங்க எனக் கூறினர். ஆனால், பிக் பாஸ் முடிந்த பின்னரும் இவர்களது காதல் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதராக இருந்த நிலையில் தான் இவர்கள் உண்மையாகவே காதலிக்கின்றனர் என்று தெரிந்தது.
பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்: இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8வது சீசனை தொட்டுள்ளது. ஏகப்பட்ட காதல் கதைகள் அந்த வீட்டில் நடந்தாலும் அனைத்துமே கன்டென்ட்டுக்காக நடைபெற்றதாகவே இருந்த நிலையில், உண்மையாகவே கணவனை இழந்த பாவனியுடன் அமீருக்கு காதல் ஏற்பட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கணவனை இழந்த பாவனி: சின்னத்திரை நடிகையாகவும் சில சினிமா படங்களிலும் நடித்திருந்த பாவனிக்கும் தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயம் நடைபெற்றது. இருவரும் 2017ம் ஆண்டு காதலர் தினத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில், 2017ம் ஆண்டு மே மாதம் பாவனியின் முதல் கணவர் பிரதீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டது பாவனியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பீச்சில் ரொமாண்டிக் டான்ஸ்: பாவனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய காதலர் அமீர் உடன் பீச்சில் ரொமாண்டிக் டான்ஸ் போட்டுள்ள வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். கெளரவம், வஜ்ரம், ஜூலை காற்றில் மற்றும் துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாவனிக்கு ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு கொடுத்தா: பீச்சில் பாவனியுடன் அமீர் நடனமாடிய வீடியோ ஷேர் செய்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனுஷின் “நீ டக்குன்னு பார்த்தா மனசு” பாடலில் வரும் “பச்ன்னு ஒன்னு இச்சுன்னு கொடுத்தா” வரிகளுடன் அந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இதெல்லாம் வீட்டில் வைத்துக் கொள்ளுங்க அமீர் என்றும் ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் போட்டு வருகின்றனர். அமீர் மற்றும் பாவனி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவும் சென்றுள்ளனர். சினிமாவில் பிசியாக இருந்து வருவதால் அதிகமாக சோஷியல் மீடியாவில் தலை காட்டாத நிலையில், மீண்டும் ரசிகர்களுக்கு இந்த போஸ்ட் மூலம் சந்தோஷத்தை கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











