அமீர், பாவனி ஜோடி பொருத்தம் சூப்பர்.. மாலை டம் டம் பாடலுக்கு செம டான்ஸ்.. ட்ரெண்டாகும் வீடியோ !
சென்னை : பிக் பாஸ் அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து ஆடிய கலக்கலான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருக்கும் ஜோடிபொருத்தம் சூப்பரா இருக்கு இருவரும் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கூறி வருகின்றனர்.
அண்மையில் இருவரும் ஜோடியாக அளித்த பேட்டியில், காதல் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தாங்கள் நல்ல நண்பர்கள் என கூறியுள்ளனர்.

பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

பாவனி 3வது இடத்தில்
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5வது சீசனில் அதிக சர்ச்சைகளை சந்தித்த போட்டியாளர் என்றால் அது பாவனி தான். முதலில் காயின் டாஸ்கில் தொடங்கிய சர்ச்சை, பின்னர் அபிநய் உடனான காதல் விவகாரம், அமீர் உடன் முத்த சர்ச்சை என நீண்டு கொண்டே சென்றது. இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்ற பாவனி, 3வது இடத்தை பிடித்து அசத்தினார்.

அமீர், பாவனி காதல் கிசுகிசு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீர் பாவனியை காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. வெளியே வந்த பின் அமீர் அளித்த பேட்டியில் நான் பாவனியை காதலிப்பது உண்மைதான் இதை நான் வீட்டிலிருக்கும் போதே கூறிவிட்டேன். ஆனால் , பாவனி என்னை நண்பனாக பார்ப்பதாக கூறியிருந்தார். அண்மையில் இருவரும் ஜோடியாக அளித்த பேட்டியில், காதல் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்ததோடு மட்டுமின்றி, தாங்கள் நல்ல நண்பர்கள் என்பதை தெளிவுபடுத்தினர்.

மாலை டம் டம்
இந்நிலையில், பாவனி மற்றும் அமீர் இருவரும் இணைந்து எனிமி திரைப்படத்தில் வரும் கல்யாண பாடலான மாலை டம் டம்... மஞ்சர டம் டம் பாடலுக்கு ஜோடி போட்டு நடனமாடி உள்ளனர். இந்த வீடியோவில் பாவனி மெருன் கலர் உடையில் புது பெண்போல மினுமினுப்புடன் இருக்கிறார்.அதே போல அமீர் வெள்ளை நிற குர்த்தாவில் அட்டகாசமாக இருக்கிறார். இந்த பாடலில் இருவரின் கெமிஸ்ட்ரி சும்மா சூப்பராக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அமீர், பாவனிக்கு ஜோடிப்பொருத்தம் சூப்பராக இருக்கிறது. இருவரும் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கருத்து கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











