காஷ்மீர் என்ன காஷ்மீர்.. ஸ்விட்சர்லாந்தில் கொஞ்சி விளையாடும் அமீர் - பாவனி.. ஐஸ் கட்டி எடுத்து?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ஒருவரை ஒருவர் அந்த நிகழ்ச்சியில் இருந்தே காதலிக்கத் தொடங்கினர்.

ஆரவ் - ஓவியா காலத்தில் இருந்தே பிக் பாஸ் காதல் கவின் - லாஸ்லியா காதலை போல வெளியே வந்தால் நீடிக்காது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்த நிலையில், வெளியே வந்தும் அமீர் மற்றும் பாவனியின் காதல் ரொம்பவே நெருக்கமாக தொடர்கிறது.

பிரபலங்கள் பலரும் காஷ்மீரில் பனியுடன் விளையாடி வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், ஸ்விட்சர்லாந்தில் தனது காதலி உடன் அமீர் ஐஸ் கட்டி எடுத்துப் போடும் விளையாடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டு லவ்

பிக் பாஸ் வீட்டு லவ்

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அந்த காதல் காணாமல் போய் விட்டது என விமர்சிக்கப்பட்டது. ஹரிஷ் கல்யாணுக்கும் ரைசா வில்சனுக்கும் காதல் என இருவரும் பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடி போட்டு நடித்ததும் ரூமர்கள் கிளம்பின. சமீபத்தில், ஹரிஷ் கல்யாண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு இடையே பூத்த காதலும் நிகழ்ச்சி முடிந்ததும் முடிவுக்கு வந்த நிலையில், கடைசியாக உருவான காதல் மற்றும் நிகழ்ச்சி முடிந்தும் இன்னமும் ஸ்ட்ராங்காக தொடர்கிறது.

பாவனியை துரத்தி துரத்தி

பாவனியை துரத்தி துரத்தி

பாவனி பின்னாடி ஜெமினி கணேசன் பேரன் அபிநய் சுற்றி வந்த நிலையில், கடைசியாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த டான்ஸ் கொரியோகிராஃபர் அமீர் பாவனியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் பாவனியை துரத்தி துரத்தி அமீர் காதலிக்க, அமீரின் காதலுக்கு நோ சொல்ல முடியாமல் யெஸ் சொல்லி விட்டார் பாவனி.

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி. சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் நடித்து வந்த பாவனி பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், தனது அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். பாவனி தான் ஆள் வைத்து அவரை கொன்று விட்டதாக சர்ச்சைகள் அடிபட்டன. ஆனால், தனக்கும் அந்த தற்கொலைக்கும் சம்பந்தமில்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது முதல் கணவர் மரணம் குறித்து பாவனி பேசியிருந்தார்.

ஆறுதலாக வந்த அமீர்

ஆறுதலாக வந்த அமீர்

பாவனியின் வாழ்க்கையில் இன்னொரு காதலும் பூத்தது. அந்த நபருடன் திருமணம் செய்து கொள்ள நினைத்த நிலையில், கடைசியில் அவரும் பாவனியை விட்டு பிரிந்து சென்றதாக கூறுகின்றனர். கடைசியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாவனிக்கு ஆறுதலான துணையாக அமீர் வந்து இருக்கிறார்.

துணிவு படத்தில் திருமணம்

துணிவு படத்தில் திருமணம்

பாவனிக்கும் அமீருக்கும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமணம் செய்து வைத்து விஜய் டிவி மாஸ் காட்டி இருந்தது. அந்த டிராமா திருமணம் அடுத்ததாக அஜித்தின் துணிவு திரைப்படத்தில் பாவனியும் அமீருக்கும் சினிமா திருமணமாக மாறிய காட்சிகளும் இடம்பெற்றன. ஒரு வருடம் காதலித்து விட்டு அடுத்த ஆண்டு உண்மையாகவே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என சமீபத்தில் பாவனி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் மஜா

ஸ்விட்சர்லாந்தில் மஜா

துணிவு படத்தின் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து சென்று வந்த பாவனி மற்றும் அமீர் தற்போது திருமணம் செய்து கொள்ளாமலே ஹனிமூனுக்கு செல்வது போல ஸ்விட்சர்லாந்தில் தங்களது கோடை விடுமுறையை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இருவரும் பனிக்கட்டியை எடுத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

காஷ்மீர் என்ன காஷ்மீர்

காஷ்மீர் என்ன காஷ்மீர்

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், லெஜண்ட் சரவணன், மோனிஷா நெல்சன் என பலரும் காஷ்மீருக்கு படையெடுத்து உள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் என்ன காஷ்மீர், உன்னை நான் ஸ்விட்சர்லாந்துக்கே கூட்டிட்டுப் போறேன் என அமீர் தனது ரொமான்ஸை பனிப்பொழிவு போல பாவனி மீது பொழிந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X