ஒரே வீடு.. படுக்கை மட்டும் ரெண்டு.. கண்டிஷனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தும் அமீர், பாவனி?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூத்த காதலிலேயே வெளியே வந்தும் தொடரும் காதல் என்றால் அது அமீர் மற்றும் பாவனியின் காதல் மட்டும் தான் என அடித்துச் சொல்லலாம்.
ஓவியா - ஆரவ் காதல் முதல் கவின் - லாஸ்லியா காதல் வரை எல்லாமே பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே வந்ததும் காணாமல் போய் விட்டன.

ஜெமினி கணேசன் பேரன் அபிநய் எவ்ளோ தான் ட்ரை பண்ணாலும் கடைசியில் பாவனி அமீருக்குத் தான் செட் ஆகி விட்டார் என பிக்பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்ததை எல்லாம் மறக்க முடியாத நிலையில், ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனி பெட்ரூமில் தான் அமீர் மற்றும் பாவனி படுத்துக் கொள்கிறார்களாம்.
திருமணம் செய்துக்கொள்ளாமல் லிவின்: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக களமிறங்கிய அமீர் மற்றும் பாவனி இருவரும் அந்த நிகழ்ச்சிக்குப் பின் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்டு டைட்டிலையே தட்டித் தூக்கினர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக லிவிங் டுகெதர் வாழ்க்கையை திருமணம் செய்துக் கொள்ளாமல் நடத்தி வருகின்றனர் என்றும் சமீபத்தில் பாலி தீவுக்கு ஹனிமூன் சென்று வந்தததாகவும் பல சர்ச்சைகள் வெடித்தன.

பிரேக்கப் பஞ்சாயத்து: அடிக்கடி இந்த பிரச்சனையை அமீர் மற்றும் பாவனி சந்தித்து வருகின்றனர். இருவரது புகைப்படங்கள் தனியாக ரிலீஸ் ஆனாலே இருவரும் பிரிந்து விட்டதாக கொளுத்திப் போட்டு வருகின்றனர்.
சந்தோஷமாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் இந்த நட்சத்திர ஜோடியினர் நாங்க பிரேக்கப் செய்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறி வருகின்றனர்.
இரண்டு படுக்கை: ஒரே வீட்டில் ஒன்றாக அமீர் மற்றும் பாவனி வாழ்ந்து வந்தாலும், இரண்டு படுக்கைகள் இருப்பதாகவும், திருமணம் செய்துக் கொண்டு தான் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுவோம் என்றும் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அமீர் மற்றும் பாவனி கூறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
சினிமாவில் ஓரளவுக்கு சாதித்து விட்டு திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாகவும், அதுவரை ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியாக ஏன் இருக்க வேண்டும் என்று தான் ஒரே வீட்டில் இருக்கிறோம். இது அரேஞ்ச்ட் லிவிங் டுகெதர் வாழ்க்கை என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











