Bigg Boss Tamil 7 Aishu: பார்க்க ஸ்லிம்மான யாஷிகா மாதிரியே இருக்காங்க.. யாரு இந்த பிக் பாஸ் 7 ஐஷு?

சென்னை: Bigg Boss Tamil 7 Aishu - பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்க விஜய் டிவி ப்ராடெக்டாக இருக்கணும் அல்லது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களின் சொந்தமாக இருக்கணும் என்கிற ஒரு எழுதப் படாத விதி சமீப காலமாக அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட அமீரின் நடனப்பள்ளி மாணவி மற்றும் நெருங்கிய தோழி தான் இந்த ஐஷு எனும் ஐஸ்வர்யா என்கின்றனர்.

Amir friend and Dance vs Dance contestant Aishu will be part in Bigg Boss Tamil 7

ஊட்டியை சேர்ந்த இவர் அமீரின் நடனப் பள்ளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை அமீரை பிக் பாஸ் வீட்டுக்குள்ளே வந்து பார்த்து கலக்கல் நடனத்தை போட்ட ஐஷு இந்த முறை பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளராக மாறியுள்ளார் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

லீக்கான லிஸ்ட்: நடிகர் பப்லு, கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா, மாடல் நடிகை அனன்யா ராவ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, விஜே பார்வதி, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம், விஷ்ணு, நடிகர் சத்யா மற்றும் ஐஷு உள்ளிட்ட பெயர்கள் கசிந்துள்ளன.

இவங்களாம் கன்ஃபார்ம்: இதில், இதுவரை பப்லு, கூல் சுரேஷ், யுகேந்திரன், ரவீனா தாஹா, ஐஷு உள்ளிட்ட போட்டியாளர்கள் உறுதியான போட்டியாளர்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து இன்று இரவு ஷூட்டிங் முடிவடையும் போது மொத்த பட்டியலும் வெளியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரு இந்த ஐஷு: பார்க்க அப்படியே ஒல்லியான யாஷிகா ஆனந்த் போல செம க்யூட்டாக இருக்கும் ஐஷு இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்கு வரும் நிலையில், ஏகப்பட்ட இளைஞர்களின் ஃபேவரைட் போட்டியாளராக மாறிவிடுவார் என்றே தெரிகிறது.

ஐஷுவை பார்க்க இந்த முறை அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. நடன பள்ளி மாணவரான ஐஷு கலர்ஸ் தமிழில் நடைபெற்ற டான்ஸ் vs டான்ஸ் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு செமி ஃபைனல் வரை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு நல்ல டான்ஸை காலையில் ரசிகர்கள் கண்டு களிப்பார்கள் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X