Aamir Khan daughter wedding: அமீர்கான் மகளுக்கு விரைவில் டும் டும் டும்.. எந்த தேதியில் தெரியுமா?

மும்பை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடத்திய நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணத்தை நடத்த போவதாக தேதியையும் அறிவித்துள்ளார்.

58 வயதாகும் நடிகர் அமீர்கான் கடைசியாக லாசிங் செத்தா படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. ஆஸ்கர் என்ற படத்தை ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்து எடுத்தும் பலன் அளிக்கவில்லையே என நினைத்து அப்செட் ஆன அமீர்கான் சினிமாவை விட்டு சில ஆண்டுகள் ஒதுங்கி இருக்கப் போவதாக அதிரடியாக அறிவித்து விட்டார்.

Amir Khan announces his daughter Ira Khan marriage date

இரண்டு மனைவிகளுடன் விவாகரத்து: முதல் மனைவி ரீனா தத்தாவை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக கிரண் ராவ் என்பவரையும் திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார்.

மூன்றாவதாக தனக்கு மகளாக நடித்த நடிகை சனா ஷேக் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், அது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காத அமீர்கான் தனது மகள் இரா கானுக்கு விரைவில் திருமணத்தை நடத்தி முடிக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

மகள் திருமண தேதி அறிவிப்பு: நுபுர் ஷிகாரே என்பவரை தனது மகள் இரா காதலித்து வந்த நிலையில், அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய அமீர்கான் கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி தனது மகளின் நிச்சயதார்த்தத்தை கோலாகலமாக நடத்திய நிலையில், இரா கானின் திருமணம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தனது மகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு பக்கபலமாக இருந்தது நுபூர் தான் என்றும் அப்படி ஒரு பையன் என் மகளுக்கு கணவராக கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் என அமீர்கான் மனநல நாள் குறித்த கருத்தரங்கில் நேற்று பேசும்போது கூறியிருந்தார்.

மேலும், என் மகள் திருமணத்தின் போது என்னுடைய சிரிப்பையும் அழுகையையும் எப்படி கட்டுப்படுத்த போகிறோம் என்றே தெரியாமல் என் வீட்டார் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கலகலப்பாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X