Sitaare Zameen Par: அமீர் கான் நடித்துள்ள ‘சிதாரே ஜமீன் பர்‘.. படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
சென்னை: அமீர் கான் நடித்து இந்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் சிதாரே ஜமீன் பர். இந்த திரைப்படத்தில், திவி நிதி ஷர்மா எழுதி பிரசன்னா ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில், அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, பிரிஜேந்திர கலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆமிர் மற்றும் அபர்ணா புரோஹித் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
'சீதாரே ஜமீன் பர்' திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸின் ரீமேக்காகும். இந்த திரைப்படத்தில் அமீர் கான் பாஸ்கெட் பால் பயிற்சியாளராக வருகிறார். அவருக்கு இருக்கும் குடிபழக்கத்தால் அடிக்கடி பிரச்சனையில் மாட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அப்படி ஒரு பிரச்சனையில் அமீர் கான் மாட்டிக்கொள்ள, அவரை அறிவுசார் குறைபாடுள்ளவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சியாளராக இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால், அந்த இடத்திற்கு செல்லும் அமீர் கான், அங்குள்ள மக்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சி அளிப்பதே படத்தின் கதை. இந்த திரைப்படத்திற்காக உண்மையில் கற்றல் குறைபாடுள்ள நபர்களை தேர்வு செய்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். மற்ற சராசரி மனிதர்களைப் போல அவரவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதே இந்த படத்தில் மெசேஜாக சொல்லப்பட்டுள்ளது.

சீதாரே ஜமீன் பர் விமர்சனம்: நேற்று தியேட்டரில் வெளியான சீதாரே ஜமீன் பர் படம் 9500க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இத்தனை தியேட்டரில் படம் வெளியான போதும், படத்தின் முதல் நாள் வசூல், ரூ.11.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது. படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால், படத்தின் வசூல் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 'சீதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஓடிடியில் பார்க்க வாய்ப்பே இல்லை என்பதை அமீர் கான் விளம்பரப்படுத்தி வருகிறார். கொரோனாவிற்கு பின், OTT தளங்களின் வரத்து அதிகரித்துவிட்டதால், தியேட்டரில் ஒரு படம் வெளியான சில 8 வாரத்திலேயே படம் ஓடிடியில் வெளியாகி விடுகிறது. இதன் காரணமாகத்தான் தியேட்டருக்கு மக்கள் வருவது குறைத்து, ஓடிடியில் படத்தை பார்த்துக்கொள்ளலாம் என அனைவரும் நினைக்கின்றனர் என்பதை நடிகர் அமீர் கான் நம்புவதால், ஓடிடியில் 'சீதாரே ஜமீன் பர்' படம் வெளியாவதற்கு தாமதமாகும் என்பதை அமீர் கான் விளம்பரப்படுத்தி வருகிறார்.,
கலவையான விமர்சனம்: 'சீதாரே ஜமீன் பர்' படம் மந்தமான விமர்சனங்களைப் பெற்றுள்ளதாலும், முதல் நாள் வசூல் அமீர் கான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற போதும் படத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து இருக்கிறார். அமீர் கான் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு லால் சிங் சத்தா திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது 'சீதாரே ஜமீன் பர்' படம் வெளியாகி முதல் நாளில் வெறும் ரூ.11.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.


Click it and Unblock the Notifications











