கூலி படத்தில் தரமான சம்பவம் இருக்கோ?.. கெஸ்ட் ரோலில் அந்த நடிகர் நடிக்கிறாரா?.. இன்று தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயிலர் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இதில் அவருடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. மேலும் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூலி: வேட்டையன் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கமல் ஹாசனுக்கு விக்ரம் என்ற படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தது போல் கூலி படத்தையும் லோகேஷ் மெகா ஹிட் படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்சியூ ஃபார்முலா: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர். எல்சியூ என்று ஒரு சினிமாட்டிக் யுனிவெர்ஸையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். விக்ரம் படத்துக்கு அது ஒர்க் அவுட் ஆனாலும் கடைசியாக லோகி இயக்கிய லியோ படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. குறிப்பாக அந்தப் படத்தில் வேண்டுமென்றே எல்சியூவை திணித்திருக்கிறார் என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் ஓபனாக வைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கியமான படம்: லோகேஷ் இதுவரை இயக்கிய படங்களிலேயே லியோ படம்தான் மோசமான விமர்சனங்களை பெற்றது. அதன் காரணமாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் கூலி படத்தை அவர் முக்கியமான படமாகவே பார்க்கிறார். இந்தப் படத்தை வைத்து லியோவில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தரமான பதில் சொல்லும் முனைப்பில் உழைத்துவருகிறார். படத்தின் டைட்டில் டீசரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. இப்போது படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் மும்முரமாக நடந்துவருகிறது.

அமீர்கான் கெஸ்ட் ரோல்: படத்தில் யார் யார் என்னென்ன ரோல் ஏற்றிருக்கிறார்கள் என்பது தொடர்பான அப்டேட்டுகள் இன்று வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர்கான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகுமா இல்லை விக்ரம் படத்தில் சூர்யாவை சர்ப்ரைஸாக இறக்கியதுபோல் இதிலும் அமீரை லோகேஷ் இறக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











