Amir :பாவனியின் ரகசியத்தை வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட அமீர்.. என்ன இப்படி திட்றாங்க!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்கம் முதலே பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வந்த பாவனி,ஒரு கட்டத்தில் தன்னுடைய முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்ததை சோகத்துடன் பகிர்ந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் ரவுண்டில் உள்ளே நுழைந்த அமீர், பாவனியிடம் ஆரம்பத்திலேயே தன்னுடைய காதலை ப்ரபோஸ் செய்தார்.

அமீர் செய்த செயலுக்கு திட்டித் தீர்த்த பாவனி : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏராளமானவர்களை பிரபலமாக்கியுள்ளது. பலருக்கு காதலையும் கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவனிக்கும் இந்த நிகழ்ச்சி காதலை பரிசாக கொடுத்துள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் அமீர் இயக்கத்தில் பாவனி நடிக்க புதிய படத்தையும் அறிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்க போட்டியாளராக களமிறங்கினார் பாவனி. தொடர்ந்து சிறப்பாக சக போட்டியாளர்களுடன் நேரத்தை இவர் செலவழித்த நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய முதல் கணவர், தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்ததை இவர் வருத்தத்துடன் பகிர்ந்தார். இதனால் சக போட்டியாளர்களிடம் மட்டுமில்லாமல் ரசிகர்களின் அனுதாபத்தையும் பெற்றார். இதனிடையே நிகழ்ச்சியில் இடையே பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அமீர், பாவனியிடம் உடனடியாக தன்னுடைய காதலை ப்ரபோஸ் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாவனி, அவரது காதலை ஏற்கவில்லை.

முதல் வாழ்க்கை ஏற்படுத்திய வலியிலிருந்து மீள முடியாத பாவனி, அமீரின் காதலை ஏற்க முடியாமல் தவித்த நிலையில், அவரை கவர பல்வேறு யுத்திகளை செய்தார் அமீர். ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வரையில் அமீரின் காதலை பாவனி ஏற்கவில்லை. இதையடுத்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவரும் கலந்துக் கொண்டனர். டான்ஸ் மாஸ்டரான அமீருக்கு இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. ஆனால் அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடினார் பாவனி.
ஆனாலும் அவருக்கும் சேர்த்து தானே அனைத்து பர்பார்மென்சையும் செய்த அமீர், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வெற்றிக்கு காரணமானார். இதையடுத்து இந்த வெற்றி மேடையிலேயே அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார் பாவனி. இந்த ஜோடி, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜோடி. இவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதி செய்த நிலையில், திருமணம் அடுத்த ஆண்டில்தான் என்று அறிவித்துள்ளனர். இதனிடையே அமீர் இயக்கத்தில் பாவனி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக இந்த ஜோடி காணப்படுகிறது. அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பாவனி. இதில் அதிகமாக அமீர் எடுத்த புகைப்படங்களே காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அமீர் விளையாட்டாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பாவனியின் அழகின் ரகசியம் இந்த பவுடர் டப்பாதான் என்று கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பாவனி, டேய் மென்டல் என்று ரிப்ளை செய்துள்ளார். தான் யூஸ் செய்யும் பவுடர் டப்பா, மற்றும் அதை தான் யூஸ் செய்வதை புகைப்படமாக எடுத்து அதை சமூக வலைதளத்தில் அமீர் பதிவிட்டுள்ளதற்கு அவர் திட்டி தீர்த்துள்ளார். இவர்களது உறவு மிகவும் சிறப்பானது. திருமணத்திற்கு முன்பே, இருவரும் அதிகமான இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தனியாகவும் நண்பர்களுடனும் உல்லாசமாக பொழுதை போக்கி வருகின்றனர். வேலையிலும் சிரத்தையாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











