பாவனியை காதலிக்கும் அமீர்.. பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டாரா? அதிருப்தியில் அஷ்ரஃப்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமீரை வளர்த்து வரும் அர்ஷஃப் அவர் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அமீர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்றார்.

வந்த ஆரம்பத்தில் ரசிகர்களின் பாராட்டை பெற்ற அமீர், அடுத்த சில நாட்களிலேயே பாவனி பின்னால் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

பாவனியை காதலிப்பதாக கூறி எப்போதும் அவருடன் ஜொள்ளு விட்டு வருகிறார். பாவனி அவரது காதலை ஏற்க மறுத்த போதும் அவருக்கு முத்தம் கொடுத்து மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

அம்மாவை கொலை பண்ணிட்டாங்க

அம்மாவை கொலை பண்ணிட்டாங்க

இந்நிலையில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தனது தந்தையை பார்த்ததே இல்லை என்றும் தனது தாய் கொல்லப்பட்டது குறித்தும் கூறி ரசிகர்களை கலங்க வைத்தார். மேலும் தனது தாயின் மறைவுக்கு பிறகு தன்னை வளர்த்த அஷ்ரஃப் குடும்பத்தினர் குறித்தும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார் அமீர்.

கையை அறுத்து சொல்லுவேன்

கையை அறுத்து சொல்லுவேன்

இந்நிலையில் அமீரை வளர்த்த அஷ்ரஃப் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ள அவர், அமீர் பாவனி பின்னால் சுற்றுவது குறித்த கருத்துக்களையும் கூறியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, கையை அறுத்து சொல்லுவேன், கேரியருக்காக ஒரு பொண்ணு பின்னாடி போக மாட்டான். சோஷியல் மீடியாவில் அமீர் குறித்து போடப்படும் கமெண்ட்டுகளை எங்களால் பார்க்க முடியவில்லை.

தொலைத்து விடுவானா?

தொலைத்து விடுவானா?

ஒரு பெண் நோ சொன்ன பிறகும் அவர் பின்னால் அமீர் சென்றால் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள்.
ஏடிஎஸ் பிராண்ட்ட உருவாக்க நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். அதை ஒரே நாளில் அமீர் தொலைத்து விடுவானா? நிச்சயமாக அப்படி செய்ய மாட்டான். ஒரு பார்வையாளராக அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக்பாஸ் விதிமுறைகளுக்கு எதிராக இருந்திருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருக்கலாம்.

பாவனி ஏன் எதிர்க்கவில்லை?

பாவனி ஏன் எதிர்க்கவில்லை?

அந்த முத்தம் உண்மை என்றால் பாவனி ஏன் முத்தம் கொடுத்ததும் பெட்டை விட்டு எழுந்து செல்லவில்லை? அவன் முகத்தில் காரி உமிழ்ந்திருக்கலாம், இல்லை அவனை அடித்திருக்கலாம். ஆனால் பவானி இதில் எதையுமே செய்யவில்லை. இது ஏன் என்று புரியவில்லை. சோஷியல் மீடியாவில் போடப்படும் கமெண்டுகளை பார்க்க முடியவில்லை.

இந்த அமீர் யார் என்று தெரியவில்லை

இந்த அமீர் யார் என்று தெரியவில்லை

அமீரை அசிங்கமாக பேசுகிறார்கள். அவ்ளோ கஷ்டப்பட்டு இப்போது ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள அமீர், ஒரு விஷயத்திற்காக எல்லாவற்றையும் இழப்பானா என்று எனக்கு புரியவில்லை. அவன் அப்படி செய்யும் ஆள் இல்லை. அது அவன் இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் வரை இருந்த அமீரை தான் எனக்கு தெரியும். இப்போது இருக்கும் அமீரை எனக்கு தெரியவில்லை.

எந்த கெட்டப்பழக்கம் இல்லை

எந்த கெட்டப்பழக்கம் இல்லை

அமீர் எங்க பையன், எந்த கெட்டப் பழக்கமும் அவனுக்கு இல்லை. அவன் இப்போது வரை சிங்கிள். அவன் ரொம்ப நேர்மையானவன். அவனுக்கு என சில மிலிட்டரி புரோட்டோக்கால் இருக்கு. காலையில் எழுந்து ஜாக்கிங் போவான். உடற்பயிற்சி செய்வான். இவ்ளோ தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்ளோ சாப்பிட வேண்டும் என்று சில புரோட்டோக்கால் வைத்து வாழ்பவன்.

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு

அவனை பார்த்து நான் இன்ஸ்பையர் ஆகியிருக்கேன். இந்த பிக்பாஸுக்குள் போன பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்கு புரியவில்லை. இந்த கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும் போது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஏன்னா அவனுக்கு பாராட்டை மட்டுமே பார்த்தவர்கள் நாங்கள். இன்று நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Recommended Video

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! இந்த வாரம் BBல் இருந்து வெளியேறும் Contestant | Varun, Niroop, Akshara
தூக்கமே வரவில்லை..

தூக்கமே வரவில்லை..

நான் தூங்கி ரெண்டு நாட்கள் ஆகிறது. எனக்கு தூக்கமே வரவில்லை. இது அமீர் இல்லை. அமீர் பாவனியை காதலிப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது. இதுவரை அவன் வாழ்க்கையில் எந்த பெண்ணும் இல்லை. 10 வருஷமா நான் அவனை வளர்க்கிறேன். நான் போடும் சட்டைகளைதான் போட்டுக்கொள்வான். இன்று பிக்பாஸில் அவன் போட்டிருக்கும் சட்டை கூட என்னுடையதுதான்... என கூறியுள்ளார் அஷ்ரஃப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X