அந்த காரணத்திற்காக அமீருக்கு விட்டுக் கொடுத்தாரா ராஜு.. டிக்கெட் டு ஃபினாலேவை வென்றாரா அமீர்?
சென்னை: டிக்கெட் டு ஃபினாலேவுக்கான போட்டி இந்த வாரம் தொடங்கியதில் இருந்து நடைபெற்று வருகிறது.
முதல் நபராக நிரூப்பை வெளியேற்றும் முயற்சியில் இறங்கிய சிபிக்கு வெற்றி கிடைத்த நிலையில், கடைசி சுற்றில் சிபி அமீருடன் மோதவுள்ளார்.
இந்நிலையில், அமீருக்காகத் தான் ராஜு விளையாடாமல் விட்டுக் கொடுத்துள்ள காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

போராடும் சிபி
கடைசி வரை டாஸ்க்கை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் போராடி வருகிறார் சிபி. சஞ்சீவ் முதலில் முன்னேறிய நிலையில், கடைசி இடத்தில் இருந்த அமீரை முன்னுக்கு கொண்டு வர தேவையான கேள்விகளை அடுத்தடுத்து ஹவுஸ்மேட்கள் கேட்டது அன்ஃபேராகவே பார்க்கப்படுகிறது.

அமீருக்காவே கொடுக்கல
இதுவரையில் நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை விட படு மோசமான டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் இது என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் கழுவி ஊற்றி வருகின்றனர். காலில் அடிபட்டுள்ள அமீர் ஜெயிக்க வேண்டும் என பிக் பாஸ் டீமே இந்த டாஸ்க்கை இவ்வளவு மொக்கையாக நடத்தி உள்ளது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விட்டுக் கொடுத்த ராஜு
ராஜு நாம எப்படியோ ஃபைனலுக்கு சென்று விடுவோம் டைட்டில் வின்னராக மாறிவிடுவோம் என அதீத நம்பிக்கை இருக்கும் நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை சரியாக விளையாடாமல் ஒரு நபருக்காக விட்டுக் கொடுத்ததாக அவரே ஒப்புக் கொண்டார். அமீருக்காக தான் ராஜு விட்டுக் கொடுத்தார் என்பது அமீரிடம் இது தொடர்பாக ராஜு பேசியதில் இருந்தே தெரிகிறது.

அதுதான் காரணமா
ராஜுவும் அமீரும் WWE கேம் விளையாடிய போது தான் அமீருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சரியாக இன்னமும் நடக்க முடியாமல் அமீர் உள்ளார். அந்த குற்ற உணர்வின் காரணமாகத் தான் ராஜு அமீருக்காக விட்டுக் கொடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அமீரின் சோக கதை
அதுமட்டுமின்றி அம்மாவை கொலை செய்து விட்டனர். அநாதையாக இருந்தேன் ஒரு குடும்பம் தத்தெடுத்து வளர்த்தது என அமீர் சொன்ன சோக கதையும் ராஜுவை வெகுவாக பாதித்திருக்கும் அதனால் தான் அமீர் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை வரவேண்டும் என ராஜு ஆசைப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

வெற்றி பெற்ற அமீர்
டிக்கெட் டு ஃபினாலேவுக்கான கடைசி போட்டி அமீர் மற்றும் சிபிக்கு இடையே நாளை நடைபெற உள்ள நிலையில், அமீர் தான் டிக்கெட் டு ஃபினாலேவை வென்றார் என்கிற ரகசியம் சமூக வலைதளங்களில் வழக்கமான எவிக்ஷன் சீக்ரெட் கசிவது போல கசிந்து விட்டது. சிபிக்கு கிடைக்க வேண்டிய டிக்கெட் டு ஃபினாலே அமீருக்கு கிடைத்திருக்கிறது என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











