பிரபல நடிகரின் கூச்சத்தை மேடையிலேயே போக்கிய ஹீரோயின்.. டிரெண்டிங்காகும் வீடியோ!

சென்னை: கூச்ச குணமுடைய நடிகர் விஜய் ஆண்டனியை, நடிகை அமிஷா நர்வல் மேடையில் ஆடவைத்து அசத்தினார்.

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் கொலைகாரன். க்ரைம் திரில்லர் படமான இதனை ஆண்ட்ரூவ்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார்.

Amisha Narwal make Vijay Antony dance on the stage

கொலைகாரன் திரைப்படம் நாளை ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கொலைகாரன் படக்குழுவினர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விஜய் ஆண்டனி, அமிஷா நர்வல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Amisha Narwal make Vijay Antony dance on the stage

முதலில் மேடை ஏறிய நடிகை அமிஷா நர்வல், விஜய் ஆண்டனியையும் தன்னுடன் இணைந்துகொள்ள அழைத்தார். பின்னர் தன்னுடன் நடனமாடும்படிக் கேட்டுக்கொண்டார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார் விஜய் ஆண்டனி.

Amisha Narwal make Vijay Antony dance on the stage

நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் கொலைகாரன் படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர்.

Amisha Narwal make Vijay Antony dance on the stage

கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் " கில்லர் " எனும் பெயரில் வெளியாகவுள்ளது. கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X