இளம் நடிகர் மரணம்: போகும் வயசா இது, நம்பவே முடியல- பிரபலங்கள் அதிர்ச்சி

By Siva

ஹைதராபாத்: சம்மோகனம் படத்தில் அதிதி ராவ் ஹைதரியின் முன்னாள் காதலராக நடித்த அமித் புரோஹித் திடீர் என்று மரணம் அடைந்துள்ளார்.

மோகனகிருஷ்ணா இந்திராகாந்தி தயாரித்து, இயக்கிய சம்மோகனம் தெலுங்கு படம் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டானது. அந்த படத்தில் சுதீர் பாபு ஹீரோவாகவும், அதிதி ராவ் ஹைதரி ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். அதிதியின் முன்னாள் காதலராக நடித்திருந்தவர் அமித் புரோஹித்(வயது 35).

இந்நிலையில் அமித் புரோஹித் இளம் வயதில் இறந்துவிட்டதாக சம்மோகனம் குழு ட்வீட் செய்து கொண்டிருக்கிறது.

அதிதி

அமித் புரோஹித்தின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பானவர், கடின உழைப்பாளி, அதற்குள் சென்றுவிட்டார் என்று அதிதி ராவ் ஹைதரி அதிர்ச்சியில் ட்வீட் செய்துள்ளார்.

சுதீர் பாபு

அமித் புரோஹித்தின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அவர் சம்மோகனம் படத்தில் சமீராவின் முன்னாள் காதலர் அமித் மல்ஹோத்ராவாக நடித்தார். நட்பாக பழகுபவர், ஒவ்வொரு ஷாட்டுக்கும் மெனக்கெடுவார். மேலும் ஒரு நல்ல மற்றும் இளம் நடிகர் சீக்கிரமே நம்மை விட்டு சென்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று சுதீர் பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர்

அமித் புரோஹித்தின் மரண செய்தியை நம்பவே முடியவில்லை என்று சம்மோகனம் இயக்குநர் மோகனகிருஷ்ணா இந்திராகாந்தி ட்வீட் செய்துள்ளார். உங்களை மிஸ் பண்ணுவேன் அமித். உங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க நினைத்தேன். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சகோதரா என்கிறார் இயக்குநர்.

அமித்

அமித் புரோஹித் இளம் வயதில் இப்படி போய்விட்டீர்களே என்று பிரபலங்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். அமித் நேற்று மரணம் அடைந்துள்ளார். ஆனால் அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அமித் புரோஹித் செவன் நைட்ஸ், ஆலாப் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்களின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் அவர் எப்படி இறந்தார் என்று யாராவது சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X