அரசியலில் நுழையக்கூடாது.. அமிதாப் அட்வைஸ்.. தர்பார் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்த ரஜினி!

சென்னை: அரசியலில் நுழையக்கூடாது என நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு அட்வைஸ் செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

தர்பார் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மூன்று அறிவுரை

மூன்று அறிவுரை

நடிகர் ரஜினிகாந்த் ட்ரெயிலரை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், தனக்கு மூன்று அறிவுரைகளை வழங்கியதாக கூறினார்.

அமிதாப் அட்வைஸ்

அமிதாப் அட்வைஸ்

அவர் பேசியதாவது, 60 வயதுக்குப் பிறகு இந்த மூன்று விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று அமிதாப் கூறினார். ஒன்று தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

காலையிலேயே புறப்படனும்

காலையிலேயே புறப்படனும்

இரண்டாவது எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். எந்த வேலை இருந்தாலும் பரபரப்பாக இருக்க வேண்டும். காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டுவிட வேண்டும்.

முதல் இரண்டுதான்

முதல் இரண்டுதான்

மூன்றாவது அரசியலில் ஈடுபடக்கூடாது. ஆனால் என்னால் அவர் கூறிய முதல் இரண்டைதான் என்னால் கடைபிப்பிடிக்க முடிந்தது என்றார்.

திருநங்கை வேடம்

திருநங்கை வேடம்

இதனைக் கேட்ட, இயக்குநர் ஏஆர் முருகதாஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் மேடையிலேயே கை தட்டி சிரித்து வரவேற்றனர். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் கூறினார்.

ஸ்க்ரீப்ட் வரல

ஸ்க்ரீப்ட் வரல

தற்போதுதான், என்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். ஆகையால் இதுவரை எந்த ஸ்க்ரீப்ட்டும் வரவில்லை என்றும் கூறினார்.

இது சினிமா நிகழ்ச்சி

மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இது சினிமா நிகழ்ச்சி, சினிமா வேற அரசியல் வேற.. அதுகுறித்த வேறு ஒரு தளத்தில் பேசுகிறேன் என்று கூறி முடித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X