கண்ணாடி மாதிரி தரை.. தலையில் இடிக்கும் மேகக்கூட்டம்.. இங்க சைக்கிள் ஓட்டனுமாம் அமிதாப் பச்சனுக்கு!
சென்னை: சமூக வலைதளங்களில் வைரலான ஒரு அற்புதமான வீடியோவை பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் அந்த இடத்திற்கு சென்று சைக்கில் ஓட்ட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் அமிதாப் பச்சன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன்.
படங்கள் மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அமிதாப் பச்சனுக்கு சினிமா மட்டுமின்றி அரசியலும் அத்துப்படிதான்.

அமிதாப் ஆசை
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகர் அமிதாப் பச்சன், தனது டிவிட்டர் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை பார்த்து தானும் அங்கு போக வேண்டும் தன்னுடைய சைக்கிளில்.. என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு ரம்மியம்
அமிதாப் பச்சன் ஷேர் செய்திருக்கும் வீடியோவில் கண்ணாடி போன்ற தரையில் மேகக்கூட்டம் அப்படியே தரைய்ல பளிச்சென தெரிகிறது. மேலும் மேகக்கூட்டங்களும் மிகவும் நெருக்கமாகவே உள்ளது. அந்த இடத்தை பார்க்கவே அவ்வளவு அழகாகவும் ரம்மியமாகவும் உள்ளது.

உப்பு பிளாட்ஸ்
நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்திருக்கும் இந்த இடம் பொலிவியாவின் உயுனி நகரமாகும். சிறந்த சுற்றுலாத்தலமான இங்கு ஏராளமான உப்பு ஏரிகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய உப்பு பிளாட்ஸ் என்றும் உலகின் மிகப்பெரிய கண்ணாடி என்றும் அழைக்கப்படுகிறது.

எழில் கொஞ்சும் இடம்
இங்கு குறைந்தப்பட்சம் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. அதிகப்பட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். ஆண்டுக்கு 60000க்கும் மேற்பட்ட மக்கள் சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர். இப்படி ஒரு எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார் அமிதாப் பச்சன்.

ஃபேவரைட் லிஸ்ட்
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் ரொம்ப ஈஸியாக இந்த இடத்திற்கு போகலாம் சார்.. ஒரே ஒரு படம் நடித்தால் போதும் என்று பதிவிட்டுள்ளனர். பிரபலங்கள் பலரும் அந்த இடம் தங்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











