ஒரு வழியா பிரம்மாண்ட புரமோஷனை ஆரம்பிச்சிட்டாங்க.. பொன்னியின் செல்வன் டீசரை யார் வெளியிடுறா தெரியுமா?

சென்னை: பொன்னியின் செல்வன் டீசர் நாளை வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் அறிவிப்பை இந்தியளவில் பிரம்மாண்டமாக பிரபலங்கள் வாயிலாக ஏன் வெளியிடவில்லை என போஸ்டர்கள் வெளியான போது ரசிகர்களே கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த கவலைகளை போக்கும் விதமாக பிரம்மாண்ட புரமோஷனை கையில் எடுத்து இருக்கிறது லைகா நிறுவனம்.

பொன்னியின் செல்வன் டீசர் எப்போ

பொன்னியின் செல்வன் டீசர் எப்போ

நாளை (ஜூலை 8) மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் லீடு ரோலில் நடித்துள்ளனர். மேலும், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்கள் கதையின் மாந்தர்களாக இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட புரமோஷன் பண்ணுங்க

பிரம்மாண்ட புரமோஷன் பண்ணுங்க

பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் இந்த வாரம் வரிசையாக தினமும் மதியம் 12 மணிக்கு வெளியாகி வந்தன. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் மட்டுமே அந்த போஸ்டர்களை வெளியிட்ட நிலையில், பாகுபலி ரேஞ்சுக்கு புரமோஷன் பண்ணாதான் பான் இந்தியா அளவில் படம் ஹிட்டாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஒரு வழியாக டீசரை பாலிவுட்டின் முன்னணி நடிகரை வைத்து வெளியிட இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.

அமிதாப் பச்சன் ரிலீஸ் பண்றாரு

அமிதாப் பச்சன் ரிலீஸ் பண்றாரு

பொன்னியின் செல்வன் இந்தி டீசரை பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த படத்தில் சுந்தர சோழனாக அமிதாப் பச்சன் தான் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியானது. ஆனால், மருமகள் ஐஸ்வர்யா ராயை எப்படி தனக்கு ஜோடியாக்கி நடிப்பது என நினைத்த நிலையில், அவர் இந்த படத்தில் இருந்து விலகினார் என்றும் கூறப்பட்டன. இந்நிலையில், இந்தி டீசரை அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்.

Recommended Video

Ponniyin Selvan, உலகமே வியந்து பார்க்கும் அருள் மொழி வர்மன்
தமிழ் டீசருக்கு யார்

தமிழ் டீசருக்கு யார்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசர் பற்றிய அறிவிப்பை முதலில் வெளியிடாமல் இந்தி டீசருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். நந்தம்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கு பெறுவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் இருவரும் நடித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் டீசர் ரிலீசுக்கு அவர்கள் வருகை தந்தால் படத்திற்கு வேறலெவல் புரமோஷன் கிடைத்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X