அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. விரைவில் குணமடைய இந்திய திரையுலகமே பிரார்த்தனை!

மும்பை: பாலிவுட் பிதாமகன் என போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியான விஷயம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Recommended Video

Amitabh Bachchan Abhishek bachchan ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு

அமிதாப் பச்சன் நடிப்பில் சமீபத்தில், அமேசான் பிரைமில் குலாபோ சித்தாபோ படம் வெளியாகி இருந்தது.

அபிஷேக் பச்சன் நடிப்பில் ப்ரீத்: இன்டு தி ஷேடோஸ் வெப்சீரிஸ் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹாஷ்டேக் பிரார்த்தனை

ஹாஷ்டேக் பிரார்த்தனை

இந்தியளவில் பல்வேறு மொழிகளில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர். "Get Well Soon Sir", #AmitabhBachchan, #AbhishekBachchan, #AishwaryaRaiBachchan என பல ஹாஷ்டேக்குகளை ரசிகர்கள் உருவாக்கி தங்களின் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்சி ட்வீட்

டாப்சி ட்வீட்

2016ம் ஆண்டு அமிதாப் பச்சன் உடன் இணைந்து பிங்க் படத்தில் நடித்திருந்தார் நடிகை டாப்சி, அந்த படம் பாலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய புகழை உருவாக்கி கொடுத்தது. கடந்த ஆண்டு, மீண்டும் அமிதாப் பச்சனுடன் இணைந்து பாட்லா என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வருவீர்கள் சாம்பியன் என டாப்சி, அமிதாப் குணமடைந்து வர ட்வீட் செய்துள்ளார்.

மம்மூட்டி பிரார்த்தனை

மம்மூட்டி பிரார்த்தனை

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பரவிய செய்தி அறிந்தவுடனே, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘Get Well Soon Sir' என விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற தனது பிரார்த்தனை வைத்துள்ளார்.

மகேஷ்பாபு விருப்பம்

மகேஷ்பாபு விருப்பம்

வெகு விரைவாக குணம் அடைந்து, முழு ஆரோக்கியத்துடன் நடிகர் அமிதாப் பச்சன் வீடு திரும்ப வேண்டும் என தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகேஷ் பாபுவின் பதிவை தொடர்ந்து, அவரது ரசிகர்களும், அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்

எஸ்.ஜே. சூர்யாவின் உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்றும், அது அவரால் முடியும் என்றும், 77 வயதாகும் அமிதாப் பச்சன், இன்னும் 23 ஆண்டுகள் சாதிக்க வேண்டியது இந்த திரை உலகில் நிறையவே இருக்கு என எஸ்.ஜே. சூர்யா பதிவிட்டுள்ளார்.

தனுஷ் பிரார்த்தனை

தனுஷ் பிரார்த்தனை

இயக்குநர் ஆர். பால்கி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன், கட்டிப் புரண்டு சண்டையிட்டு நடித்திருந்தார் நடிகர் தனுஷ், தற்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியான செய்தி அறிந்த அவர், சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பல பிரபலங்கள்

பல பிரபலங்கள்

நடிகர் மோகன் லால், துல்கர் சல்மான், அனுபமா பரமேஸ்வரன், க்ரீத்தி சனோன், பரிணீத்தி சோப்ரா, ரகுல் ப்ரீத் சிங், ரந்தீப் ஹுடா, சோனம் கபூர் என இந்திய பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கொரோனா பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் பலவற்றில் அமிதாப் பச்சன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X