குரு துரோணர் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?
சென்னை: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை இயக்குநர் நாக அஸ்வின் பெற்றார். அந்த படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
அந்த படத்தை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து பிரபாஸை வைத்து நாக் அஸ்வின் உருவாக்கியுள்ள கல்கி படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கல்கி படத்தில் பைரவா என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
500 கோடி பட்ஜெட்: இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் செலவு செய்யாத அளவுக்கு சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக கல்கி படத்தை இயக்குநர் நாகேஷ் பின் உருவாக்கி வருகிறார். கல்கி படம் வெளியானால் பாகுபலி படத்தை விட பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்தும் எனது பார்க்கப்படுகிறது.
அமிதாப் பச்சன் கதாபாத்திரம்: கல்கி படத்திலிருந்து இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று அமிதாப்பச்சனின் கதாபாத்திரம் குறித்த அறிமுக வீடியோ இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல தற்போது அமிதாப் பச்சனின் கதாபாத்திர வீடியோ அதிரடியாக வெளியாகியுள்ளது.
துரோணரின் மகன்: மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு குருவாக இருந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா அனுமான் போலவே இன்னும் இந்த பூமியில் உயிருடன் உலாவி வருவதாக புராணக் கதைகள் உள்ளன. அதை மையப்படுத்தி தற்போது அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைத்திருக்கிறார் நாக் அஸ்வின்.
அறிமுக டீசர் மிரட்டுது: துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா என தன்னை அமிதாப் பச்சன் அறிமுகம் செய்யும்போதே மகாபாரதத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட சாபக் காட்சியையும் காட்டி மிரட்டி விடுகிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.
கல்கி யாரு?: பிரபாஸ் பைரவா கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்திலும் நடித்துள்ள நிலையில், கல்கி ஆக கமல்ஹாசன் நடித்து இருக்கிறாரா என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹனுமான் வருவாரா?: அஸ்வத்தாமா வரும் போது ஹனுமானும் வர வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். கல்கி 2898 ஏடி என டைட்டில் வைத்துள்ள இந்த படத்தை எதிர்காலத்தில் கல்கி அவதாரம் வரும் போது எப்படி இருக்கும் என்கிற கதையை மையமாக கொண்டு இயக்குநர் நாக் அஸ்வின் உருவாக்கி உள்ளார் என்றே தெரிகிறது. இந்த ஆண்டு வெளியான ஹனுமான் படத்தில் கிளைமேக்ஸில் ஹனுமான் வரும் காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கின. அடுத்ததாக ஜெய் ஹனுமான் படமும் உருவாகி வருகிறது. ராமாயணம் எனும் படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











