ரண்டமூழம்... ரூ 250 கோடியில் உருவாகும் பிரமாண்ட 'பீம மகாபாரதம்!'

By Shankar

மகாபாரதம்... எடுக்க எடுக்கக் குறையாத கதை அட்சயபாத்திரம். அவ்வளவு கதைகள். அத்தனை கோணங்கள்.. அளவற்ற சுவாரஸ்யம்!

மகாபாரதம் பல முறை தொடர்களாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. திரையுலகில் மகாபாரதம் இதுவரை முழுமையாக எடுக்கப்பட்டதில்லை. அதிலிருந்து சில கதைகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன.

இப்போது முதல் முறையாக மகாபாரதத்தை முழுமையாகப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ரண்டமூழம்

ரண்டமூழம்

மகாபாரதத்தின் அடிப்படையில் பிரபல கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டமூழம்' என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாக்குகின்றனர்.

அமிதாப்

அமிதாப்

இந்தியாவின் இணையற்ற நடிகர்களான அமிதாப் பச்சன், மோகன்லால், நாகார்ஜுனா, விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை இந்தப் படத்தில் நடிக்க வைக்கின்றனர்.

அடுத்த ஆண்டு

அடுத்த ஆண்டு

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ 250 கோடி

ரூ 250 கோடி

இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 250 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தை எம்டி வாசுதேவன் நாயரும் ஹரிஹரனும் இயக்கப் போகிறார்களாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.

பீமன் பார்வையில்

பீமன் பார்வையில்

இந்தப் படத்தின் சிறப்பு, முழு கதையையும் பீமனின் பார்வையில் சொல்லப்படுவதுதான். இது பீம மகாபாரதம். தமிழில் இதே பெயரில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

மோகன்லால்

மோகன்லால்

பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால், பீஷ்மர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன், அர்ஜுனன் கதாபாத்திரத்தில் விக்ரம், திரௌபதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா போன்றோர் நடிக்கவிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில்...

ஆங்கிலத்தில்...

ஆங்கிலத்திலும் இந்தப் படம் வெளியாகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ரண்டமூழம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X