எல்லா பெயரையும் அவரே வாங்கிட்டு போய்டுவாரு.. கமல் படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய அமிதாப்!

சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் தான் காரணம் என சமூக வலைதளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், நடிகர் கமலுக்கும் அதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

Even Ulaga Nayagan Kamal Hassan Faced Nepotism

கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்த படம் ஒன்று பாதியிலே நின்று போக, அமிதாப் பச்சன் தான் காரணம் என்கிற த்ரோபேக் தகவலை நெட்டிசன்கள் தற்போது உலவ விட்டு வருகின்றனர்.

வளர விடுவதில்லை

வளர விடுவதில்லை

நட்சத்திர நடிகர்கள் தாங்கள் வந்த பாதையை மறந்து விட்டு, தங்கள் பிள்ளைகளையே பெரிய நடிகர்களாக மாற்றி வரும் அவல நிலை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவதாகவும், தங்களை போல கடுமையாக உழைத்து எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் முன்னுக்கு வரும் நடிகர்களை அவர்கள் வளர விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கமலுக்கும் அது நடந்தது

கமலுக்கும் அது நடந்தது

தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் வரை சென்று தனது புகழை நிலை நாட்ட போராடியபோது, பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், கமலின் வளர்ச்சியை தடுக்க நினைத்து, ஒரு படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக தற்போது, நெட்டிசன்கள் த்ரோபேக் தகவல் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

கபார்தார்

கபார்தார்

மருத்துவராக அமிதாப் பச்சனும், நோயாளியாக கமல்ஹாசனும் நடித்து வந்த கபார்தார் படம் பாதியிலேயே நின்று போக அமிதாப் பச்சன் தான் காரணம் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பேசிய பழைய பேட்டியில் உள்ள தகவல் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. 80களில் உருவான அந்த படத்தை தெலுங்கு இயக்குநர் தத்தினேனி ராமாராவ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

எல்லா பெயரையும்

எல்லா பெயரையும்

அந்த படத்தின் கிளைமேக்ஸ் படி நடிகர் கமல்ஹாசன் இறுதியில் இறந்துவிடுவார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் கமல் மீது தான் விழும், தனக்கு இந்த படத்தால் எந்த ஒரு பெயரோ, ஆதாயமோ கிடையாது என அமிதாப் பச்சன் அந்த படத்தை விட்டு விலகியாதாக பாக்யராஜ் சொன்ன தகவல் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

ஆனால், அந்த படம் பாதியிலேயே நின்று போனாலும், கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் இணைந்து 1985ம் ஆண்டு 'கெராப்தார்' எனும் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல அமிதாப் பச்சன், பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான குலாபோ சிட்டாபோ படத்திலும் ஆயுஷ்மான் குரானவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X