Ram Temple - அயோத்தி ராமர் கோயிலில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்.. வேறலெவலில் டிரெண்டாகும் பிக்ஸ்!
அயோத்தி: அயோத்தியில் இன்று நடைபெற்று வரும் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் நேற்று சென்னையில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் 500 வருட போராட்டம் முடிவுக்கு வந்தது என கூறிச் சென்றார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் நடிகர்கள் அமிதாபச்சன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளே செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, விராத் கோலி உள்ளிட்ட பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் வருகை தந்துள்ளனர்.

அயோத்தியில் அமிதாப் பச்சன்: அயோத்தி ராமர் கோயில் அருகே சராயு என்னும் இடத்தில் 10,000 சதுர அடியில் மனை ஒன்றை சுமார் 14.5 கோடி ரூபாய்க்கு அமிதாபச்சன் வாங்கி உள்ளார். பகவான் ஸ்ரீ ராமர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட அமிதாப் பச்சன் இன்று நடைபெற உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு முதல் ஆளாக சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ராமர் கோயிலில் ரஜினிகாந்த்: வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு, தோளில் துண்டு ஒன்றை போர்த்திக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பக்தி மயத்துடன் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்குள் நுழையும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அயோத்திக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவரது நண்பரும் பாலிவுட் நடிகருமான அனுப்பம் கெர் சந்தித்த புகைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், ராமர் கோயிலுக்குள் ரஜினிகாந்த் செல்லும் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

அப்பாவுடன் ராம்சரண்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குள் செல்லும் காட்சிகள் வகை தற்போது வெளியாகியுள்ளன. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் கிளைமாக்ஸ் காட்சியில் ராமர் போலவே காவி உடையை அணிந்து கொண்டு கையில் வில்லேந்தி நின்ற காட்சிகள் ராம பக்தர்களை புல்லரிக்க செய்தன.

தனுஷ் முதல் பல நடிகர்கள்: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட்டுடன் ராமர் கோயிலுக்கு சென்றுள்ளார். நடிகர் தனுஷ் தனது மகனுடன் அயோத்திக்கு சென்றுள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்கள் அயோத்தியில் இன்று திறக்கப்பட உள்ள ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க படையெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











