31 கோடிக்கு வீடு வாங்கிய அமிதாப் பச்சன்.. இனிமே சன்னி லியோனும் இவரும் பக்கத்து வீட்டுக்காரங்க!
மும்பை: பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன் 31 கோடிக்கு டூப்ளக்ஸ் குடியிருப்பை புதிதாக வாங்கி உள்ளார்.
மும்பையில் ஏற்கனவே ஏகப்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் புதிய வீடு வாங்கி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், அந்த அப்பார்ட்மென்ட்டில் நடிகை சன்னி லியோனும் ஒரு ஃபிளாட் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

31 கோடிக்கு புது வீடு
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் 31 கோடிக்கு மும்பையில் புதிதாக சொகுசு குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார். கட்டுமான பணிகளில் இருக்கும் இந்த குடியிருப்பின் 27 மற்றும் 28வது மாடிகள் மொத்தமும் அமிதாப் பச்சன் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

5704 சதுர அடி
27வது மற்றும் 28வது மாடிகளில் சுமார் 5704 சதுர அடி கொண்ட குடியிருப்பை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார். மேலும் அதில், 6 கார் பார்க்கிங் வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் என அனைவரும் கட்டுமான பணிகள் முடிந்த உடன் இந்த குடியிருப்பில் விரைவில் குடியேறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெய்பர் சன்னி லியோன்
பச்சன்கள் மட்டுமின்றி அட்லாண்டிஸ் நிறுவனம் கட்டி வரும் இந்த சொகுசு குடியிருப்பில் நடிகை சன்னி லியோனும் 12வது மாடியை ஆக்கிரமித்துள்ளார். சுமார் 16 கோடிக்கு கடந்த மார்ச் 28ம் தேதி பத்திரப் பதிவு செய்துள்ளார் சன்னி லியோன். மேலும், பிரபல இயக்குநர் ஆனந்த் எல் ராயும் ஒரு குடியிருப்பை வாங்கி உள்ளாராம்.

அமிதாப் பச்சனின் வீடுகள்
இந்தியாவின் மெகா சூப்பர்ஸ்டாரான பிக் பி அமிதாப் பச்சன் மும்பையில் ஏகப்பட்ட வீடுகளை வாங்கி போட்டுள்ளார். மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஜல்சா எனும் 10,125 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட பங்களாவில் தான் தற்போது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன்.

50 கோடிக்கு
கடந்த 2013ம் ஆண்டு சுமார் 50 கோடி ரூபாய்க்கு ஜல்சாவிற்கு பின் புறம் 8000 சதுர அடிகள் கொண்ட இடத்தையும் வாங்கிய அமிதாப் பச்சன் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். மேலும், மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட சொத்துக்கள் அமிதாப் பச்சன் பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











