அடேங்கப்பா.. 500 கோடி பட்ஜெட்டா.. பூஜையுடன் ஆரம்பமானது பிரபாஸ் 21.. அமிதாப் பச்சன் பங்கேற்பு!

ஹைதராபாத்: நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ளது.

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் வைஜெயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார்.

நடிகையர் திலகம் இயக்குநர்

நடிகையர் திலகம் இயக்குநர்

தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்றும் வெளியான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் நாக் அஸ்வின் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளார்.

பிரபாஸ் 21

பிரபாஸ் 21

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பிக் பட்ஜெட் நாயகனாக மாறியுள்ள நடிகர் பிரபாஸின் 21வது படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் பிரம்மாண்ட பூஜை இன்று ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக பிரம்மாண்ட செட் போடப்பட்ட அரங்கில் நடைபெற்றுள்ளது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக முதன் முறையாக பிரபல பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பட பூஜையில் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமிதாப் பங்கேற்பு

அமிதாப் பங்கேற்பு

பாலிவுட்டின் பிக் பி ஆன நடிகர் அமிதாப் பச்சன் ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் பிரபாஸின் 21வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். இன்று நடைபெற்ற பட பூஜையில் கலந்து கொண்டது குறித்து அமிதாப் ட்வீட் போட்டுள்ளார்.

பிரபாஸ் வரல

பிரபாஸ் வரல

ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த படத்தின் பூஜையில் பங்கேற்கவில்லை. முதலில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ள படக் காட்சிகள் முதல் 10 நாள் படமாக்கப்படும் என்றும், விரைவில் பிரபாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

500 கோடி

500 கோடி

200 கோடி, 250 கோடி பட்ஜெட் படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் 500 கோடி எனும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போ வசூல் எத்தனை ஆயிரம் கோடியா இருக்குமோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X