’ரான்ஞ்னா’ல நா நடிக்காம போய்ட்டேனே: புலம்பும் அமிதாப்
மும்பை: சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தனுஷின் ஹிந்தி படமான 'ரான்ஞ்னா' வில் தான் ஒரு சிறிய கேரக்டரிலாவது தோன்றும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என தெரிவித்துள்ளார் அமிதாப்.
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான அமிதாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரான்ஞ்னா திரைப்படத்டைப் பார்த்தார். படத்தைப் பார்த்து விட்டு, 'இது ஒரு நல்ல படம். இதுபோன்ற படங்களில் நடிப்பவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருப்பதாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

தனுஷின் முதல் ஹிந்திப்படம்...
'ரான்ஞ்னா' தனுஷ் நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம். இப்படத்ஹ்டில் இவருக்கு ஜோடியாக் சோனம் கபூர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் தமிழில் ‘அம்பிகாபதி' என்ற பெயரில் நாளை வெளியாக இருக்கிறது.

பாராட்டுமழை...
ரான்ஞ்னாவைப் பார்த்தவர்கள் எல்லாம், சகட்டு மேனிக்கு படத்திற்கு பாராட்டுக்களை வாரி இறைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது குறித்து நடந்த விழாவில் இந்தப் படத்தைப் பார்த்தார் அமிதாப்.

அமிதாப் மகிழ்ச்சி...
படத்தைப் பார்த்து பிரமித்த அமிதாப், தனது இணைய தள பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது, ‘இந்தத் திரைப்படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே என்று என்னைப் புலம்பவும், பொறாமைப்படவும் வைத்துவிடுகின்றது.

இளைய தலைமுறையினர் திறமைசாலிகள்...
இளைய தலைமுறையினர் வெளிப்படுத்தும் அபரிமிதமான திறமையும், கலை நுணுக்கத்திறனும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இன்னும் சில திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நடித்து வெளிவரவிருக்கும் சில படங்களையும் பார்க்கவேண்டும். இத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு சந்தோஷத்தையே அளிக்கும்' எனத் தெரிவித்துள்ளார் அமிதாப்.

விரைவில், சத்யகிரஹா....
பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில், அமிதாப் நடித்துள்ள சத்யகிரஹா விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











