Thalaivar 170: அடேங்கப்பா.. ரஜினிகாந்த் படத்தில் இணைந்த அமிதாப் பச்சன்.. தலைவர் 170 அலப்பறை தான்!
சென்னை: தலைவர் 170 படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் என மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி 600 கோடி வசூல் வேட்டையாடிய நிலையில், தற்போது அடுத்த படத்தையும் பான் இந்தியா படமாக மாற்றி உள்ளார் சூப்பர்ஸ்டார்.

ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த காஸ்டிங் அப்டேட்டையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமிதாப் பச்சன் ஆன்போர்ட்: அமிதாப் பச்சன் நடித்த இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்து ஏகப்பட்ட ஹிட் கொடுத்து வந்தவர் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன் உடன் இணைந்து ஹம், கெராஃப்தார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் மருத்துவராக ரகுவரன் நடித்த வேடத்தில் முதலில் அமிதாப் பச்சனையே அணுகியதாக தகவல்கள் வெளியாகின. கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் தான் முதலில் நடிக்கவிருந்தது என்றனர். ஆனால், கடைசியில் சூர்யா ரோலக்ஸாக மிரட்டினார்.
இந்நிலையில், தலைவர் 170 படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் கடைசியாக ஆன்போர்ட் ஆகி உள்ளார். பல்வேறு மொழிகளில் ஆளுமைகளாக உள்ள நடிகர்களை இணைந்து தரமான சம்பவத்தை மீண்டும் கொடுக்க ரஜினி முடிவு செய்துள்ளார்.

பகத் ஃபாசில், ராணா டகுபதி: தலைவர் 170 படத்தில் பகத் ஃபாசில், ராணா டகுபதி என ஏற்கனவே கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து முன்னணி நடிகர்கள் கமிட் ஆகி உள்ள நிலையில், பாலிவுட்டில் இருந்து தற்போது அமிதாப் பச்சனும் களம் இறங்கி இருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மூன்று நடிகைகள்: முன்னதாக தலைவர் 170 படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகிய மூன்று பேரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











