நான் இளையராஜாவை பார்த்து எப்படி நடுங்கினேன் தெரியுமா?: அமிதாப் பச்சன்

By Siva

மும்பை: தான் இளையராஜா முன்பு பாட பயந்து நடுங்கியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானி இளைராஜாவுக்கு பாலிவுட் சார்பில் நேற்று முன்தினம் மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஷமிதாப் இயக்குனர் ஆர். பால்கி ஏற்பாடு செய்த இந்த விழாவை உற்சாகமாக முன்நின்று நடத்தியவர் பாலிவுட் ஜாம்பவானான அமிதாப் பச்சன்.

விழாவில் ஷமிதாப் படத்தில் நடித்த தனுஷ், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

இளையராஜாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது நண்பர் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி, அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தபு, ஸ்ருதி ஹாஸன், அவரது தாய் சரிகா, ஆமீர் கானின் மூத்த மனைவி மற்றும் மகள், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

விழாவில் பேசிய அமிதாப் கூறுகையில், நான் இளையராஜா முன்பு பாட முயற்சியே செய்வது இல்லை. ஒவ்வொரு முறையும் நான் ஸ்டுடியோவில் தனியாக அமர்ந்து தான் பாடியுள்ளேன். பா படத்தின்போது ராஜா சாப் முன்பு பாட வேண்டி இருந்தது. அப்போது எப்படி பயந்தேன் என்பதை என்னால் விவரிக்க முடியாது என்றார்.

கமல்

கமல்

ராஜா என் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டார். இன்று அவரை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் 1000வது படத்திற்கு இசையமைப்பார் என்று எனக்கு தெரியும். அவரது 786வது படம் என்னுடையது என்பதில் மகிச்சி என்றார் கமல் ஹாஸன்.

தனுஷ்

தனுஷ்

இந்த துறைக்கு நீங்கள் தந்தவைக்காக நன்றி. நான் உங்களின் தீவிர ரசிகன். நான் தற்செயலாக நடிகன் ஆனவன். உங்கள் இசையால் தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன் என்றார் தனுஷ்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ராஜா சார், ராஜா சாமி, நன்றி. வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் இசையை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. எப்பொழுதுமே நாங்கள் உங்கள் இசையை ரசித்துள்ளோம். இங்கு உள்ள ஜாம்பவான்களுக்கு நன்றி. அதில் ஒரு ஜாம்பவானை அப்பா என்று அழைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது என்றார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

சரிகா

சரிகா

விழாவுக்கு வந்த தனது முன்னாள் மனைவி சரிகாவை பார்த்ததும் அவர் இருக்கைக்கு சென்று அவரின் கையைப் பிடித்து நலம் விசாரித்தார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X