கொரோனாவிலே நீங்க போயிடணும்.. எல்லை மீறிய நெட்டிசன்.. கடுப்பான அமிதாப் பச்சன்.. வச்சு விளாசல்!

மும்பை: ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு கொரோனா தொற்று குணமான நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா நோயால் இறந்து விட வேண்டும் என எல்லை மீறிய நெட்டிசனுக்கு அமிதாப் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
77வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார்.
இந்த வயதிலும், பல படங்களில் லீடு ரோலில் தரமான நடிப்பை கொடுத்து வருகிறார்.

குடும்பத்துக்கே கொரோனா

குடும்பத்துக்கே கொரோனா

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா என ஜெயா பச்சனை தவிர்த்து ஒட்டுமொத்த குடும்பத்துக்கே கொரோனா பாதிப்பு அண்மையில் ஏற்பட்டது. மும்பை நானாவதி மருத்துவமனையில் முன்னதாக அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3 வாரங்கள்

3 வாரங்கள்

அவர்களை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் கொரோனா சிகிச்சைக்காக அதே நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என பரிசோதனையில் வந்ததை தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கிட்டத்தட்ட 3 வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொய் செய்தி

பொய் செய்தி

சமீபத்தில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா நோய் குணமாகி விட்டது என ஆங்கில மீடியா ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், தனது உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமிதாப் பச்சன் ட்வீட் செய்திருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், சமூக வலைதளங்களில் அமிதாப் ஆக்டிவாக இருக்கிறார்.

கொரோனாவிலே போயிடணும்

கொரோனாவிலே போயிடணும்

இந்நிலையில், விஷமம் பிடித்த சில நெட்டிசன்கள், நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், அப்படியே இறந்து விட வேண்டும் என எல்லை மீறி கீழ்த் தரமான பதிவுகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த நெட்டிசன்களை பல அமிதாப் பச்சன் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

அமிதாப் பதிலடி

அமிதாப் பதிலடி

இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், "மிஸ்டர் அடையாளம் தெரியாதவரே, உன்னால் உன் அப்பன் பெயரையும் எழுத முடியாது. ஏனென்றால், உனக்கு உன் அப்பன் யாரென்றே தெரியாது." என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், விரைவில் வீடு திரும்பிடுவீங்க தாத்தா என ஆராத்யா கூறியது தனக்கு கண்ணீரையே வரவழைத்து விட்டது என்றும், ரசிகர்களின் பிரார்த்தனையால் குணமாகி திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X