அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

கல்லீரல் பாதிப்பால் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். 77 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Amitabh bachchan hospitalized for liver treatment

கடந்த 1982ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தின்போது 'ஹெப்பாடிட்டீஸ் பி' வைரஸ் பாதிப்புடன் இருந்த ஒருவரின் ரத்தம் அமிதாபுக்கு தவறுதலாக ஏற்றப்பட்டது. இதனால் அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்துக்கு மேல் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுவிட்டது.

இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமிதாபின் உடல்நிலையில் திடீர் பிரச்சினை ஏற்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் அவர் மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஐசியூவுக்கு இணையான தனி அறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் 24 மணி நேரமும் அமிதாபை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

உடல்நலக்குறைவால் அமிதாப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி, அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமிதாபுக்காக பலரும் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X