"யான்"... ஆச்சரியத்தில் அமிதாப்.. துள்ளலான ஆக்ஷன் படம் என பாராட்டு!
சென்னை: ரவி. கே. சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் யான் படம் இளமையான ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக பாராட்டியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
கடல் படத்தைத் தொடர்ந்து நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நடிக்கும் இரண்டாவது படம் யான். இப்படத்தில் ஜீவா ஹீரோ. அவருக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். நீண்ட காலமாக தயாராகி வரும் இப்படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்ப்டத்தின் டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. வரும் 2ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் ரவி.கே.சந்திரன் போட்டுக் காண்பித்துள்ளார். டிரைலரை பார்த்த அமிதாப்பச்சன் யான் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அமிதாப் கூறுகையில்...

திறமையானவர்...
ரவி கே.சந்திரன் என்னுடைய நீண்டநாள் நண்பர். மிகவும் திறமையானவர். என்னுடன் நிறைய படங்களில் நிறைய பணியாற்றியவர்.

பிளாக்...
குறிப்பாக, நான் நடித்த ‘பிளாக்' என்ற படத்தின் ஒளிப்பதிவாளராக மிகவும் திறமையாக பணியாற்றியவர்.

யான் பட டிரைய்லர்...
எனக்கு நெருங்கிய நண்பரான ரவி கே.சந்திரன் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் ‘யான்' படத்தின் டிரைய்லரை எனக்கு போட்டு காண்பித்தார். அந்த டிரைய்லர் மிகவும் நன்றாக இருந்தது.

வாழ்த்துக்கள்...
டிரைய்லரை பார்க்கும்போதே இளமையான ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. படம் பெரிய வெற்றிபெற ரவி.கே.சந்திரனுக்கு எனது வாழ்த்துக்கள் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











