க்ரிஷ் 3: விவேக் ஓப்ராயை அறிமுகப் படுத்தும் அமிதாப்

மும்பை: ஏற்கனவே வெளியான க்ரிஷ் பாகங்கள் வசூலிலை வாரிக் குவிக்க, ரசிகர்கள் க்ரிஷ் 3வில் ஹிர்திக் ரோஷன் என்ன மாதிரி சூப்பர் ஹீரோவாக வரப் போகிறார் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. தமிழகத்திலும் 400 தியேட்டர்களில் ரிலீசுக்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டதாம். இந்நிலையில் படம் பற்றி நாள்தோறும் பல சுவாரஷ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

படத்தின் அறிமுக வாய்ஸ் ஓவர் தரப் போவதாக சமீபத்தில் வெளியான தகவலால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் எகிறி இருக்கிறது.

கொய் மில் கயா....

கொய் மில் கயா....

2003ல் வெளிவந்த கொய் மில் கையா படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திர பெயர் க்ரிஷ். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து க்ரிஷ் என்ற பெயரில் அதன் சீக்வெல் 2006 ல் வெளியானது.

ஹிரித்திக் அப்பா இயக்கம்....

ஹிரித்திக் அப்பா இயக்கம்....

இரண்டு படங்களையும் இயக்கியவர் ஹிரித்திக் ரோஷனின் தந்தையும், நடிகருமான ராகேஷ் ரோஷன். ஏற்கனவே வந்த இரண்டு பாகங்களுமே ஹிட்டடிக்க, மகனுக்கான 3வது பாக வேலையில் படுபிசியானார் ராகேஷ்..

28 கிலோ ட்ரஸ்...

28 கிலோ ட்ரஸ்...

படத்தில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கென அவருக்கு தயாரிக்கப் பட்ட பிரத்யேக உடை கிட்டத்தட்ட 28 கிலோவைத் தாண்டுமாம்.

அமிதாப்பின் வாய்ஸ் ஓவர்...

அமிதாப்பின் வாய்ஸ் ஓவர்...

படத்தின் ஆரம்பத்தில், வில்லனை அறிமுகப்படுத்தி வைக்கும் காட்சியில் வரும் வாய்ஸ் ஓவரில் அமிதாப் பேசினால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம் ராகேஷ். தனது விருப்பத்தை அமிதாப்பிடம் தெரிவிக்க, உடனே ஓகே சொல்லி விட்டாராம் அமிதாப்.

இணைப்புப் பாலம்...

இணைப்புப் பாலம்...

படத்தில் வரும் அமிதாப்பின் கம்பீரமான குரல் தான் முன்னால் வெளிவந்த க்ரிஷ் பாகங்களின் தொடர்ச்சியாக, இந்த க்ரிஷ் 3 யை இணைக்கும் கதைக் கருவைத் தெரிவிக்குமாம்.

180 கோடி ரூபாய்....

180 கோடி ரூபாய்....

க்ரிஷ் பற்றி ராகேஷ் ரோஷன் கூறும்போது, ‘சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் ஆகிய அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், ‘கிரிஷ்-3' உருவாகி வருகிறது. ரூ.180 கோடி செலவில் படம் தயாராகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில், அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது.

ஹாலிவுட் நிபுணர்கள்....

ஹாலிவுட் நிபுணர்கள்....

இந்த படத்துக்காக 4 வருடங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறேன். இது, எங்கள் கனவு படம். ‘அவதார், 2012 ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு ‘கிராபிக்ஸ்' வேலைகளை செய்த நிறுவனம்தான் ‘கிரிஷ்-3' படத்துக்கும் ‘கிராபிக்ஸ்' செய்கிறார்கள். 70 பேருக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நிபுணர்கள் பணிபுரிகிறார்கள்.

தமிழில், 400 தியேட்டர்கள்...

தமிழில், 400 தியேட்டர்கள்...

படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் வெளிவர இருக்கிறது. தமீம் பிலிம்ஸ் சார்பில் சிபு வெளியிடுகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X