மாமா அமிதாப் பச்சன் ஆசியுடன் அரசியலுக்கு வந்துள்ளாரா பிரியங்கா காந்தி?
டெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆசியுடன் தான் பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அவர் டெல்லியில் மாமுன்(தாய் மாமன்) அமிதாப் பச்சனை சந்தித்து பேசியுள்ளார். பிரியங்கா அரசியலுக்கு வருவது அமிதாபுக்கு முன்பே தெரியும்.

பிரியங்கா சிறு வயதில் இருந்தே அமிதாபை மாமுன் என்று தான் அழைப்பார். காந்தி-பச்சன் குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தீர்ந்து தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
18 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி-பச்சன் குடும்பங்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. காந்தி-பச்சன் குடும்பங்கள் இடையேயான பிரச்சனை குறித்து 2000ம் ஆண்டு தான் வெளியே வந்தது. தனிப்பட்ட சோகங்கள், பர்சனாலிட்டி பிரச்சனை உள்ளிட்டவற்றால் இரு குடும்பங்களும் பிரிந்தன.
பாலிவுட்டின் அதிகாரம் படைத்த குடும்பமான பச்சன்களால் ராகுல், பிரியங்கா மற்றும் சோனியா காந்திக்கு ஆதரவு பெருகும் என்று நம்பப்படுகிறது.
43 ஆண்டுகளுக்கு முன்பு எமர்ஜென்சி காலத்தில் சஞ்சய் காந்திக்கு ஆதரவாக இருந்ததால் அமிதாப் பச்சன் கடும் விமர்சனத்திற்குள்ளானார். போபர்ஸ் ஊழல் பிரச்சனை பெரிதானபோது அப்பொழுது அலகாபாத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த அமிதாப் அரசியலை விட்டு விலகினார். போபர்ஸ் ஊழலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்தார்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மீண்டும் போட்டியிட விரும்புகிறாராம் அமிதாப். குஜராத் சுற்றுலாத் துறை பிராண்டு அம்பாசிராக நியமிக்கப்பட்ட அமிதாப் மோடியிடம் இருந்து தள்ளியிருக்க விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











