'சய்ரத்' இயக்குநரின் அடுத்த படத்தில் அமிதாப் பச்சன்!
மும்பை : 'ஃபாண்ட்ரி', 'சய்ரத்' ஆகிய படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுலே பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். நாகராஜ் மஞ்சுலே இயக்கிய முந்தைய மராத்தி படங்கள் இரண்டும் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றவை.

அடுத்த படத்தையும் மராத்தியில் எடுக்க நினைத்தவர், இப்போது இந்தியிலேயே எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஸ்க்ரிப்ட் வேலைகளில் இருக்கிறாராம். அவர் இயக்க இருக்கும் பாலிவுட் படமும் 'சய்ரத்' போல சமூகக் கருத்துகளைச் சொல்லக்கூடியதாக இருக்குமாம்.

தனது பாலிவுட் படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கும் நாகராஜ் மஞ்சுலே இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சனை அணுகியிருக்கிறார். வயதான தோற்றத்தில் அமிதாப் பச்சன் திரையில் வருவார். மிகவிரைவில், படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. 'சய்ரத்' படத்தைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சன் மஞ்சுலேவைப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











