கமலின் விக்ரம் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவம்!
சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவருடன் உடன் இணைந்து கமல்ஹாசன் நடித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் உடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் நிலையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் இணைந்து நடித்துள்ளார் என படு சீக்ரெட்டான அப்டேட் கசிந்துள்ளது.

வேறலெவல் சம்பவம்
கமல்ஹாசனின் டைஹார்ட் ஃபேன் நான் என ஒவ்வொரு படத்தை இயக்கும் போதும் சொல்லி வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கமலுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகப் போகும் கமல் படம் நிச்சயம் தியேட்டர்களில் வேறலெவல் சம்பவம் செய்ய காத்திருக்கிறது.

டாப் நடிகர்கள்
கமல்ஹாசன் உடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதுவரை படம் தொடர்பாக வெளியான அத்தனை புரமோஷன் காட்சிகளும் வெறித்தனமாக இருந்த நிலையில், தற்போது கசிந்துள்ள ஹாட் அப்டேட் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்துள்ளது.

அமிதாப் பச்சன்
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் கமல்ஹாசன் உடன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடித்துள்ளார் என்கிற ஹாட் தகவல் காட்டுத் தீ போல திரையுலகம் முழுவதும் பரவி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம் அமிதாப் பச்சன்.

மீண்டும் கமலுடன்
1985ம் ஆண்டு வெளியான Geraftaar எனும் பாலிவுட் படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து கமல் நடித்துள்ளார். அதன் பிறகு இருவரும் இணைந்து கபர்தார் எனும் படத்தில் நடித்தனர். ஆனால், அந்த படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்காத நிலையில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து விக்ரம் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

ஒரு நாள் கால்ஷீட்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் அவரிடம் ஒரு நாள் கால்ஷீட் கேட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 4 முதல் 6 மணி நேரத்தில் அவரது ஷூட்டிங்கை முடித்து விட்டார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சீக்கிரமே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











