twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' டிரைலர்.. மோகன்லாலை பாராட்டித் தள்ளிய அமிதாப் பச்சன்

    By
    |

    சென்னை: நடிகர் மோகன்லாலை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டியுள்ளார்.

    மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.

    16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

     ஜிப்ஸி ஹீரோ பிச்சைக்கார நாய்.. ஹீரோயின் லூசு.. எல்லை மீறிய ப்ளு சட்டை.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்! ஜிப்ஸி ஹீரோ பிச்சைக்கார நாய்.. ஹீரோயின் லூசு.. எல்லை மீறிய ப்ளு சட்டை.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

    மஞ்சு வாரியர்

    மஞ்சு வாரியர்

    இதில் குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

    அரபிக்கடலின் சிங்கம்

    அரபிக்கடலின் சிங்கம்

    தமிழ், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் படத்தை வெளியிட உள்ளனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில், 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' என்ற பெயர் வைத்துள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதுபற்றி அவர், 'சிறைச்சாலை படத்துக்குப் பிறகு மீண்டும் பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

    போர்க் காட்சிகள்

    இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டிரைலர் வெளியாகியுள்ளது. கடலும் கப்பலும் போர்க்காட்சிகளும் என மிரட்டிய டிரைலரைப் பார்த்த பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் மோகன் லாலைப் பாராட்டியுள்ளார்.

    Recommended Video

    Master Special Update | Thalapathy Vijay | Loskesh Kanagaraj
    அபிமானம் அதிகரிப்பு

    அபிமானம் அதிகரிப்பு

    இதுபற்றி ட்விட்டரில், 'எனது நண்பரும் சக நடிகரும் எப்போதும் நான் ரசிக்கும் மலையாள நடிகருமான மோகன்லால், அவரது புதிய படமான 'மரைக்காயர்: அரபிகடலின் சிங்கம்' படத்தின் டிரெய்லரைப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். அவர் மீதான அபிமானம் அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Amitabh Bachchan praising Mohanlal's film trailer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X