கொரோனா பாதிப்பில் தொடர்ந்து நிதியுதவி... இப்ப இந்த வேலை... முன்னுதாரணமா இருக்கற பிக் பீ|!

மும்பை : பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தொடர்ந்து இந்த வயதிலும் தன்னை படங்கள் மற்றும் விளம்பரங்களில் கமிட் செய்துக் கொண்டு உழைத்து வருகிறார்.

இது மட்டுமின்றி பல்வேறு சமூக பணிகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அனைவருக்கும் முன்னுதாரணமாக இவர் செய்துள்ள காரியம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

சுறுசுறுப்பான செயல்பாடு

சுறுசுறுப்பான செயல்பாடு

வயதானாலும் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தொடர்ந்து தன்னை படங்கள் மற்றும் விளம்பரங்களில் தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பான செயல்பாடு அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. தற்போதும் 3 முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பில் உதவி

கொரோனா பாதிப்பில் உதவி

மேலும் சமூக செயல்பாட்டிலும் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருகிறார். முக்கியமான கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். முன்னதாக டெல்லியின் ராகாப் கன்ஞ் குருத்வாராவில் கொரோனா பாதிப்பிற்காக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

போலந்திலிருந்து வரவழைப்பு

போலந்திலிருந்து வரவழைப்பு

மேலும் மும்பையில் கொரோனா பாதிப்பிற்காக போலந்திலிருந்து 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கியுள்ளார். தொடர்ந்து அவரது சமூக பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தனர்.

2வது டோஸ்

2வது டோஸ்

இந்நிலையில் கடந்த மாதத்தில் அவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். இந்நிலையில் தற்போது இரண்டாவது டோசை போட்டுக் கொண்டுள்ளார். மேலும் அதன் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் தன்னை முழுமையாக கவர் செய்துக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட அறிவுறுத்தல்

தடுப்பூசி போட அறிவுறுத்தல்

நடிப்பு மற்றும் சமூக சேவை என இரண்டிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அமிதாப் பச்சன் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு சிறப்பான உதாரணமாக உள்ளார். இதன்மூலம் மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X