ஆஹா.. என்ன லால் இது.. வந்த பரிசைப் பார்த்து... அப்படியே நெகிழ்ந்து போன அமிதாப் பச்சன்!
மும்பை : இரு சூப்பர் ஸ்டார்கள் ஒருவரை பற்றிய விஷயங்களை மற்றொருவர் பகிர்வது அவர்களின் ரசிகர்களுக்கு எப்போதும் உற்சாகமான விஷயம் தான். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வாக மோகன்லால் பற்றி அமிதாப் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனக்கு ரொம்ப ஸ்பெஷலான பரிசு ஒன்றை அனுப்பி உள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். தனது மகள் விஸ்மியா எழுதிய புத்தகத்தை தான் அமிதாப்பிற்கு பரிசாக அனுப்பி உள்ளார்.

கவிதைகளின் தொகுப்பு
விஸ்மயா, கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி, சமீபத்தில் வெளியிட்டுள்ளார். தனது கவிதைகள் மற்றும் ஓவியங்களின் தொகுப்பாக இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நெகிழ்ந்து போன அமிதாப்
அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் என்னை மிகவும் கவர்ந்த பரிசான புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளார். தனது மகள் விஸ்மயா எழுதிய கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் புத்தகத்தை அவர் அனுப்பி உள்ளார்.

மோகன்லால் மகளை வாழ்த்தி அமிதாப்
மிகவும் உணர்வுப்பூர்வமான கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அவரது திறமைகள் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அனைவரின் மனம் கவர்ந்த த்ரிஷியம் 2
மோகன்லால் நடித்த த்ரிஷியம் 2 படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு வியக்க வைக்கும் அளவிற்கு விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











