9 ஆண்டு வாழ்க்கை இப்படி முறிஞ்சுப்போச்சே.. அமிதாப் பச்சன் ரீல் மகன் அறிவித்த விவாகரத்து.. தொடருதே?

மும்பை: அமீர்கான் தனது 2வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்ததில் இருந்தே இந்தியா முழுவதும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். நாக சைதன்யா - சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜெயம் ரவி - ஆர்த்தி, ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு, ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி என பலர் விவாகரத்து அறிவிப்புகளை வெளியிட்டனர்.

சமீபத்தில் யுவேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவியான நடிகை தனஸ்ரீ வர்மா விவாகரத்து அறிவிப்பை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், நேற்று கோவிந்தா தனது மனைவி சுனிதாவை பிரியப்போவதாக வெளியான தகவல்கள் மேலும், ரசிகர்களை ஷாக்காக்கின.

Aman Verma divorce bollywood

ஆனால், அது வெறும் வதந்தி தான் என கோவிந்தாவின் உறவினர்கள் கூறி வரும் நிலையில், இதுதொடர்பாக நடிகர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், அமிதாப் பச்சனின் ரீல் மகனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அமன் வர்மா தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்துள்ளார்.

தொடரும் க்ரே டைவர்ஸ்: அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போகின்றனர் என பல மாதங்களாக வதந்திகள் கிளம்பி வந்தாலும் இருவரும் அதை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்நிலையில், அமிதாப் பச்சன், ஹேமாமாலினி நடித்த பாக்பன் படத்தில் அமிதாப் பச்சனுக்கு மகனாக நடித்த பாலிவுட் நடிகர் அமன் வர்மா தனது மனைவியை விவாகரத்து செய்து பிரியப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

9 ஆண்டுகால இல்லற வாழ்க்கை: அமன் வர்மா பாலிவுட் நடிகை வந்தனா லால்வானி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இருவரும் பரஸ்பரம் பிரியப்போவதாகவும் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வெளியான தகவல் பாலிவுட் ரசிகர்களை பதற வைத்துள்ளது. இருவரும் சூப்பரான ஜோடியாக கடந்த 9 ஆண்டுகள் காதலுடன் வலம் வந்த நிலையில், திடீரென இப்படியொரு முடிவை ஏன் எடுத்தனர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லை: திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதது தான் காரணமா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஆனால், இருவரும் இது தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காதலித்து திருமணம் செய்பவர்களே சில ஆண்டுகளுக்குப் பிறகு காதல் எல்லாம் கரைந்து போக இப்படி விவாகரத்து செய்து பிரிந்து வருவது விடாமுயற்சி படக்கதை போல நிறைய நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X