கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு.. மீண்டும் கோட் சூட் போட்டு ஷூட்டிங் கிளம்பிய அமிதாப் பச்சன்!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் மீண்டும் கோட் போட்டு ஷூட்டிங் கிளம்பி விட்டார்.

Recommended Video

Shahrukh Khan Banglow Covered with Plastic

77 வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன் அண்மையில் கொரோனா பாதிப்பு காரனமாக கிட்டத்தட்ட 3 வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கி உள்ளார்.

கொரோனாவுடன் வாழ பழகுங்கள்

கொரோனாவுடன் வாழ பழகுங்கள்

ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், நம்ம நாட்டிலும் தற்போது கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவை திட்டமிட்டே பலருக்கும் பரவி விட்டார் என பாடகி கனிகா சிங் மீது பலரும் பாய்ந்த நிலையில், இப்போ இந்தியாவில் கொரோனாவுடன் பழகி கொள்ள சொல்கின்றனர்.

அமிதாப் பச்சனுக்கு கொரோனா

அமிதாப் பச்சனுக்கு கொரோனா

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் , ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா பரவிய செய்தி நாடு முழுவதும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 77வயதாகும் பாலிவுட் பிதாமகர் அமிதாப் பச்சன் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்தனர்.

3 வாரங்களுக்கு பிறகு

3 வாரங்களுக்கு பிறகு

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமிதாப் பச்சனுக்கு கொடுக்கப்பட்ட உயரிய சிகிச்சை காரணமாக 3 வாரங்களில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு நீங்கியது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இந்நிலையில், மீண்டும் ஷூட்டிங்குக்கு அமிதாப் பச்சன் கிளம்பி உள்ள செய்தி ஒட்டுமொத்த திரைத் துறையினரையே ஷாக்காக்கி உள்ளது. நடிப்பின் மீது இந்த வயதிலும் அமிதாப் பச்சனுக்கு இருக்கும் ஆர்வம், பல இளம் நடிகர்களையே பிரம்மிக்க செய்துள்ளது. கோட் சூட் மாட்டிக் கொண்டு டிவி ரியாலிட்டி ஷோவான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்த தொடங்கி விட்டார்.

வெளியான புரொமோ

வெளியான புரொமோ

பல முன்னணி நடிகர்களே பாதியில் விட்ட படப்பிடிப்புகளை கொரோனா காரணமாக மீண்டும் துவங்க யோசித்து வரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதியின் 12வது சீசனை நடத்த துவங்கிய புரொமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன் இந்த வயதிலும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X