ரூ. 2,800 கோடி சொத்து: உயில் விபரத்தை வெளியிட்ட அமிதாப் பச்சன்

By Siva

மும்பை: தனது ரூ. 2 ஆயிரத்து 800 கோடி சொத்துக்கள் தனக்கு பிறகு யாருக்கு என்பதை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 76 வயதாகிறது. ஆனால் இந்த வயதிலும் அவர் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரலில் 75 சதவீதம் போய்விட்டது, 25 சதவீதத்தை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

Amitabh Bachchan reveals his will

உடல்நலம் சரியில்லையே என்று முடங்கிவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் அமிதாப். அமிதாப் பச்சனுக்கு ரூ. 2 ஆயிரத்து 800 கோடி சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் அவரிடம் உயில் பற்றி கேட்கப்பட்டது.

நான் இறந்த பிறகு என் சொத்துக்களை சரிசமமாக என் மகள் ஸ்வேதாவுக்கும், மகன் அபிஷேக்கிற்கும் கொடுக்கும்படி உயில் எழுதி வைத்துள்ளேன். எனக்கு மகளும், மகனும் ஒன்று தான் என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.

ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் சரி சமம் என்று பலகாலமாக கூறி வரும் அமிதாப் பச்சன் இப்படி ஒரு உயில் எழுதி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. அவர் எப்படி தன் மகனை நினைத்து பெருமைப்படுகிறாரோ அதே போன்று தான் மகளை நினைத்தும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஸ்வேதா பாரடைஸ் டவர்ஸ் என்கிற நாவலை எழுதியபோது அமிதாப் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஸ்வேதா தனது பெற்றோர் வழியில் நடிப்பை தேர்வு செய்யவில்லை மாறாக அவருக்கு புத்தகம் எழுதுவதில் தான் ஆர்வம் உள்ளது. நடிக்காவிட்டாலும் ஸ்வேதா தனது தந்தையுடன் சேர்ந்து ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார். மேலும் தனியாக கலந்து கொண்டும் ராம்ப் வாக் செய்கிறார். பாலிவுட் வட்டாரத்தில் ஸ்வேதா மிகவும் பிரபலமானவர்.

மகள்கள் எப்பொழுதுமே ஸ்பெஷல் என்று அமிதாப் அடிக்கடி கூறுவார். ஸ்வேதாவுக்கு நவ்யா என்கிற மகளும், அகஸ்தியா என்கிற மகனும் உள்ளனர். அபிஷேக் பச்சனுக்கு ஆராத்யா என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X