உதவி பண்றேன்னு ஓவர் சீன் போட்ட பிரபாஸ்.. பங்கமாக கலாய்த்த அமிதாப் பச்சன்.. என்ன நடந்தது?
மும்பை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் புரோமோஷன் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இதுவரை அந்த படத்துக்காக நடிகர் பிரபாஸ் மட்டுமே போராடிக் கொண்டிருந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தினர்.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நடிகை தீபிகா படுகோன் இந்த ஆண்டு முழுவதும் கல்கி படத்துக்காக எந்த ஒரு புரமோஷன் செய்யாத நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நடிகை அமலா பாலை போல தீபிகா படுகோனே கர்ப்ப வயிற்றுடன் படத்தின் புரமோஷனில் பங்கேற்றதை மற்ற நடிகைகளும் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தீபிகா படுகோனை டிரெண்ட் செய்து வருகின்றனர் . மேலும் அந்த நிகழ்ச்சியில், அமிதாப் பச்சனிடம் நடிகர் பிரபாஸ் பல்பு வாங்கிய காட்சிகளும் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளன.
இந்தியளவில் டிரெண்ட்: இதுவரை கல்கி படத்துக்கு கிடைக்காத புரொமோஷன் நேற்று நடைபெற்ற மும்பை நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ளது படத்திற்கான அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்து கொண்டது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் மும்பையில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்துக்காக அமிதாப்பச்சனுடன் சந்தித்த புகைப்படங்கள் டிரெண்ட் ஆனதை போல நேற்று நடைபெற்ற அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் சந்திப்பும் டிரெண்டாகி வருகிறது.
நிறைமாத நிலவு: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ள நிலையில் நிறைமாத வயிற்றுடன் நேற்று நடைபெற்ற கல்கி 2898 ஏடி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கருப்பு நிற உடை அணிந்து கொண்டு தீபிகா படுகோன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தாய்மை குறித்து அவர் பேசிய பேச்சுக்களும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளன.
பல்பு வாங்கிய பிரபாஸ்: நடிகை தீபிகா படுகோன் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது ரொம்பவே கனிவுடனும் அக்கறையுடனும் அவரை கை தாங்கலாக பிடித்து இறக்கி விட பார்த்தார். அப்போது 82 வயதாகும் அமிதாப் பச்சன் ஓடி வந்து பிரபாஸை பின்னாடியிருந்து பிடித்துக் கொண்டதும் தீபிகா படுகோன், பிரபாஸ் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். தீபிகாவுக்கே இறங்கி நடக்கத் தெரியும் பாஸ் என்றும் ஓவர் சீன் வேண்டாம் என அமிதாப் பச்சன் என்னமா கலாய்த்து விட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அந்த மனசு தான் சார் கடவுள்: பிரபாஸ் ரசிகர்கள் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி முழுவதும் சக நடிகர்களுக்கும் சீரியல் நடிகர்களுக்கும் நடிகர் பிரபாஸ் கொடுத்த முக்கியத்துவத்தையும் மற்றும் மதிப்பையும் மற்ற நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கமல்ஹாசன் அருகே தீபிகா படுகோனை நிற்க வைத்தும் கமல் மற்றும் அமிதாப் பச்சனுக்கு முன்னுரிமை அளித்ததையும் பாராட்டி வருகின்றனர். பிரபாஸின் கல்கி திரைப்படம் இந்தி பெல்ட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் நேரத்தில் பார்க்கப்படுகிறது.
திஷா பதானி மிஸ்ஸிங்: ஆனால், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்கி படத்தின் நடித்துள்ள இளம் நடிகை திஷா பதானி பங்கேற்கவில்லை. திஷா பதானி அந்த படத்தில் இடம்பெற்ற பின்னர் தான் தீபிகா படுகோன் அப்செட் ஆனார் என்றும் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதற்காகவே போஸ்டரில் இருந்து நிகழ்ச்சி வரை அவரை படக்குழு புறக்கணித்தார்களா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











