நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் ஸ்டோரி.. பிரபாஸ், தீபிகா படுகோன் படத்தில் இணைந்தார் அமிதாப் பச்சன்!

By

சென்னை: பிரபாஸ் படத்தில் பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகர் பிரபாஸ் இப்போது, ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்குகிறார்.

பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இதில், பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தபோதுதான் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் இதன் படப்பிடிப்பு தடைபட்டது. பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துவிட்டாலும், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

நாக் அஸ்வின்

நாக் அஸ்வின்

இதையடுத்து, பிரபாஸ் நடிக்கும் படத்துக்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதை சமூக வலைதளங்களில் அவர்கள் அறிவித்தனர். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம் என்று கூறப்படுகிறது.

வைஜெயந்தி மூவிஸ்

வைஜெயந்தி மூவிஸ்

மூன்றாம் உலகப் போரை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனம் இது. இந்தப் படமும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட சில மொழிகளில் உருவாகிறது.

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இதை படக்குழு இன்று அறிவித்துள்ளது.

நியாயம் செய்வோம்

நியாயம் செய்வோம்

'எத்தனையோ படங்களுக்கு மத்தியில் அமிதாப் பச்சன் எங்கள் படத்தை தேர்ந்தெடுத்திருப்பதில் அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். இதன் மூலம் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்வோம் என்று நம்புகிறோம்' என்று இயக்குநர் நாக் அஸ்வின் கூறியுள்ளார்.

சைஃப் அலிகான்

சைஃப் அலிகான்

இந்தப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள், இதற்கு முன் பார்த்திராத ஒரு சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம் என்கிறது படக்குழு.
இப்படம் 2022 ஆம் ஆண்டு முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே நடிகர் பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் நடிக்கிறார். ஓம்ராவத் இயக்கும் இதில் சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X