பாலிவுட் பிக் பி அமிதாப் பிறந்தநாள் - 77அடி கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்

மும்பை: பாலிவுட்டின் பிக் பி என்றழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனின் 77ஆவது பிறந்த நாளான நேற்று அவரது ரசிகர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரத்திலுள்ள ஃபிலிம் சிட்டியில் 77 அடி நீளமுள்ள கேக் வெட்டி தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார், அறிமுகமே தேவையில்லாத மனிதர், பிக் பி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் 77ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். 77 வயதானாலும் இன்றும் ஒரு இளைஞரை போல் விளம்பரத்தில், வெள்ளித்திரையில், சின்ன திரையில், உலக திரையரங்கில் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக விளங்குபவர்.

Amitabh Bachchan’s 77th Birthday Celebration

அவரின் ஒவ்வொரு பிறந்த நாளுமே மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படும். சமீபத்தில் அவருக்கு இந்தியாவின் மதிப்பு வாய்ந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருது அவரது பிறந்த நாளை மேலும் சிறப்பானதாக ஆகியுள்ளது.

ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அமிதாப் பச்சன் பிறந்த நாளன்று பல சர்ப்ரைஸ்கள் வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியான நேற்று அவரின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜஸ்தானின் உதய்பூரில் 77 அடி நீளமுள்ள கேக்கை வெட்டி ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை இந்த கொண்டாட்டம் மூலம் நிறைவேற்றி கொண்டனர்.

உதய்பூர் ஃபிலிம் சிட்டி சங்கர்ஷ் சமிதியின் தலைவர் முகேஷ் மாத்வானி இந்த நிகழ்வு பற்றி கூறுகையில், பிக் பியின் 77ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவது என்பது இங்கு ஒரு சடங்காகவே செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவருக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது இந்த பிறந்த நாளை மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றியுள்ளது என்றார்.

இந்த 77அடி நீளமுள்ள கேக்கில் அமிதாப் பச்சனின் படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் பலர் அமிதாப் பச்சன் போல் உடையணிந்து அந்த விசேஷமான நாளை சிறப்பாக கொண்டாடினர். அவர் பல்லாண்டுகள் நலமோடு வாழ ஃபிலிமிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X