‘குலாபோ சிட்டாபோ‘ பெரிய மூக்கு, தொப்பி, வெள்ளை தாடி.. அமிதாப் பச்சன் கெட்டப் பாத்தீங்களா?
மும்பை: குலோபோ சிட்டாபோ படத்தில் நடித்து வரும் அமிதாப் பச்சனின் கெட்டப் வெளியாகியுள்ளது.
இந்தி திரையுலகின் ஜாம்பவானான அமிதாப் பச்சன் 75 வயதை தாண்டியும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கதையம்சம் நிறைந்த படங்களில் ஆக்கப்பூர்வமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்.
தற்போது இயக்குநர் ஷுஜித் சிர்கார் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா இணைந்து நடிக்கும் குலாபோ சிட்டாபோ படம் தயாராகி வருகிறது. இதில் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

குலாபோ சிட்டாபோ அடுத்த ஆண்டு
இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது.
பெரிய மூக்குடன் அமிதாப்
படத்தில் அமிதாப்பின் கெட்டப்பை திரைப்பட வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். இதில் வயதான தோற்றத்தில் பெரிய மூக்குடன் தொப்பி அணிந்தபடி வெள்ளை தாடியுடன் காட்சியளிக்கிறார் அமிதாப் பச்சன்.

முதல் முறையாக வெள்ளித் திரையில்
இந்தப்படத்தை ரோனி லாஹிரி மற்றும் ஷீல்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். குலாபோ சிட்டாபோவில்தான் அமிதாப் பச்சனும் ஆயுஷ்மான் குரானாவும் முதல் முறையாக இணைந்து நடித்து வெள்ளித்திரையில் தோன்றப்போகிறார்கள்.

காமெடிக் கதை
குலாபோ சிட்டாபோ நகைச்சுவையான குடும்பக்கதையாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் அமிதாப் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராக நடித்து வருகிறார்.

படத்தில் சம வாய்ப்பு
படத்தில் அமிதாப் பச்சனுக்கும், ஆயுஷ்மான் குரானாவுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஷுஜித் சிர்கார் தெரிவித்துள்ளர். பிகு, விக்கி டோனரை தொடர்ந்து இருவரையும் வைத்து படம் பண்ண முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

ரசிகர்கள் வரவேற்பு
டிவிட்டரில் வெளியாகியுள்ள குலாபோ சிட்டாபோ படத்தின் அமிதாப் கெட்டப் போட்டோ அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அமிதாப்பின் கெட்டப்பிற்கு ரசிகர்களிடையே வரவேற்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











